பக்கம் எண் :

58தமிழ் வளம்

3
அகரமுதலிப் பணி நிலை

     அகரமுதலி யென்பது ஆண்டுமலரும் வாழ்க்கை வரலாறும் போன்ற தன்று. ஒரு குடிசையை ஒரு நாளிற் கட்டி முடிக்கலாம். ஒரு கோபுரம் கட்டப் பல்லாண்டு செல்லும். சில பணிகளைக் கால வரம்பிட்டு அதற்குள் செய்து முடிக்கலாம். சில பணிகளை அங்ஙனஞ் செய்ய இயலாது. அரும்பெரும் பணிகளெல்லாம் பணி வரம்பையே யன்றிக் கால வரம்பைக் கருதுதல் தவறாகும்.

     சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்-ஆங்கில-தமிழ் அகரமுதலி (Lexicon), 1913-ஆம் ஆண்டு ஐயாட்டைத் திட்டமாகத் தொடங்கி (பிற் சேர்ப்பு உட்பட) 26 ஆண்டுக்காலம் தொடர்ந்து 1939-இல் ஏறத்தாழ (4 1/2) இலக்க உருபாச் செலவில் முடிவுற்றது. தொடக்கந் தொட்டு அறுவர் பணியாற்றி வந்தனர்,

      13 மடலங்கொண்ட எருதந்துறை ஆங்கிலப் பேரகரமுதலி (The Oxford English Dictionary) முற்றுப்பெற 70 ஆண்டுகள் ஆயிற்று. ஒரு வர் பின் னொருவராகத் தொடர்ந்த நாற் பதிப்பாசிரியர் தலைமுறைக் காலத்தில், நானூற்றுவர் நிலையான உதவியாளராகப் பணியாற்றினர். மூவிலக்கத்து ஐயாயிரம் பவுண் செலவாகியுள்ளது.

     இன்று பூனாவில் அச்சாகி வரும் சமற்கிருத-ஆங்கிலப் பேரகர முதலிப்பணி 1948-இல் தொடங்கிற்று. சென்ற ஆண்டு அதன் முதன் மடலம் வெளிவந்துள்ளது. அவ் வகரமுதலி வெளியீட்டிற்கு இந்திய அரசு ஒரு கோடி யொதுக்கியுள்ளது. அதன்மேலும், மராட்டிய அரசு, பூனாப் பல்கலைக் கழகம், இந்தியப் பல்கலைக் கழக நல்கைக் குழு (U.G.C.), ஒன்றிய நாட்டினங்கள் கல்வி யறிவியல் பண்பாட்டமைப்பகம் (UNESCO), பாரிசிலுள்ள ஒரு சமற்கிருதக் கழகம் (CIPSH) ஆகியவை தனித்தனி பெருந்தொகை யுதவி வருகின்றன. அவற்றுள், ஒ நா. (UN) உதவி இறுதிவரை ஆண்டுதொறும் தொடர்வது. மொத்தச் செலவு இரு கோடிக்கு மேலாகலாம்.

     தலைமையரும் இடைமையரும் உதவியாளரும் துணையுதவி யாளருமாக, பதிப்பாசிரியன்மார் இருபத்திருவர் நிலையாகப் பணியாற்றி வருகின்றனர். 1990-இல் முடியுமென்று சொல்லப்படுகிறது. மேலுந் தொடரலாம்.

     கேரள நாட்டில், அரசும் பல்கலைக் கழகமும் இணைந்து வெளி யிட்டுவரும் எழுமடல மலையாள-மலையாள-ஆங்கில அகரமுதலிப் பணி 1953-இல் தொடங்கிற்று. பன்னிரண்டு சொற்றொகுப்பு வேலை முடித்துக்கொண்டு,