பக்கம் எண் :

66தமிழ் வளம்

6
பதவி விடுகையும் புத்தமர்த்தமும்

     பாவலர் பெருஞ்சித்தரனார் 'தென்மொழி' ஆசிரியராயிருப்பதோடு, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டப் பணியையும் மேற் கொண்டுள்ளதால், மேற்கொண்டு ஒரு பணியுஞ் செய்ய நேரமின்றி, உ.த.க. பொதுச் செயலாளர் பதவியை விட்டுவிட்டார். அவர் பதவி விடுகையோலை ஒப்புக் கொள்ளப்பட்டுவிட்டது. அவர் ஈராண்டாகச் செய்துவந்த தொண்டிற்கு, உ.த.க. சார்பில் நன்றி கூறுகின்றேன்.
     நிலையான பொதுச் செயலாளர் அமர்த்தப்பெறும்வரை, ஏற்கெ னவே துணைச் செயலாளராக இருந்து வரும் புலவர் இறைக்குருவனார் தலைமைச் செயலாளராகவும் செயலாற்றி வருவார்.
     முகவை மாவட்ட அமைப்பாளராகப் பணியேற்ற திரு அறவாழி யார், அடுத்துத் திடுமென ஆசிரியப் பயிற்சிக்குச் செல்வதாகக் கூறித் தம் பதவியினின்று விலகிக் கொண்டார். அவர் விலகோலையும் ஒப்புக் கொள்ளப்பட்டுவிட்டது.

     இவ்வாண்டிறுதியில் (ஆட்டை விழாவிற்கு முன்பு) நிலையான பொதுச் செயலாளராக அமர்த்தப் பெறவிருந்த திரு தமிழ்க்குடிமகனார், இன்று நெல்லை மாவட்டச் செங்கோட்டைச் சட்டநாதக் கரையாளர் யாதவர் கல்லூரி முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளதனால், உ.த.க. பொதுச் செயலாளர் பதவியை இனி ஏற்க முடியா தென்றெழுதி விட்டார். தனித் தமிழ்ப் பற்றுள்ள ஒருவர் பெரும்பதவி பெறுவது, உ.த.க. வளர்ச்சிக்கும் தமிழ் விடுதலைக்கும் இன்றியமையாத தாகையால், அவர் அப்பதவியில் நிலைப்பதொடு மேன்மேல் விரைந்துயரவும் இறைவனை வழுத்துகின்றேன்.
     மதுரை மாவட்ட உ.த.க. அமைப்பாளராக, மதுரை இறையியற் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் திரு.வீ.ப.க. அழகனார் (சுந்தரம்), க.மு., அமர்த்தப் பெற்றுள்ளார்.

     அமைப்பாளரில்லாத மாநிலங்கட்கும் மாவட்டங்கட்கும் தகுதியுள்ளவர் முன்வரின் அல்லது தக்காரொருவராற் பரிந்துரைக்கப் பெறின், உடனே அமர்த்தப் பெறுவர், புலவராக அல்லது பட்டந்தாங்கியராக விருப்பதும் அரசியற் கட்சியெதிலும் சேர்ந்திராமையும், சேர்ந்திருப்பின் தமிழ் முன்னும் கட்சி பின்னுமாகக் கொண்டிருத்தலும், உ.த.க. சட்ட திட்டங்கட்கு முற்றுங் கட்டுபடுதலும், ஆட்டை விழாவிற்று இருநூறு உருபாவிற்குக் குறையாது தண்டிக் கொடுக்கும் ஆற்றலுண்மையும், மாவட்ட அமைப்பாளர் பதவிக்கு இன்றியமையாத தகுதிகளாம்.
     பொருள்: உ.த.க. நோக்கம், கழக நடப்பு
     புத்தமர்த்தமும் - உறுப்பினர் கட்டணம் - முதன்மொழி அறிக்கை - ஆகியவை தொடர்பான தலைவர் அறிக்கை.
     முன்பார்வை: பொதுச் செயலாளர் பதவி விலகல் மடல் முதன் மொழி, உறுப்பினர் கட்டணத் தொடர்பான அமைப்பாளரின் மடல்கள்.