பக்கம் எண் :

73

10
பாவாணரின் மூன்று அறிக்கைகள்!

     தமிழ்நாட்டைத் தனிநாடாக்க இந்தியாரின் தூண்டுதல்    

     (தில்லி 'மெயில்' தாள் சிறப்பறிக்கையாளரிடமிருந்து வந்த செய்தி (சனு.1 - மொழிபெயர்ப்பு.)

     1. தலைமை மந்திரியார் மொழிச் செய்திபற்றி மீண்டும் திரு. அண்ணா    துரையொடு கலந்து பேசலாம்.                                       

     திருவாட்டியார் இந்திராகாந்தியார் இங்கு இன்று காலை நடந்த அறிக்கையாளர் கூட்டத்தில், மும்மொழித் திட்டம்பற்றிச் சென்னை- நடுவண் இடைப்பட்ட அறாவழக்கின் தீர்ப்பு தமிழ்நாட்டைப் பொறுத்த அளவே எங்களையும் பொறுத்துள்ளது என்று சொன்னார்.

     அவர் யாரையும் நெருக்கிடைப்படுத்த விரும்பவில்லை. ஆயின், இந்தியா முழுமைக்கும் ஒரு தேசிய இணைப்பு மொழி இருக்கவேண்டு மென்று அவர் உணர்கிறார். அவர் சென்னைக்குச் சென்றபொழுது அங்குள்ள படித்த மக்களொடு அவர் ஆங்கிலத்திற் பேசமுடிந்தது. ஆனால், பொதுமக்களோடு பேசும்பொழுது ஒரு மொழிபெயர்ப்பாளர் வேண்டியிருந்தது. அது ஒரு வருந்தத்தக்க நிலைமை.

     மற்றச் செய்திகளிற் போன்றே தீர்க்கமுடியாத எந்தச் சிக்கலும் அல்லது புதிரும் இல்லையென்பது அவர் நம்பிக்கை.

     மும்மொழித் திட்டத்திற்கு என்ன நேர்ந்தது என்று வினவப் பட்டபோது, சிரிப்பிற்கிடையே, "அது இருக்கத்தான் செய்கிறது" என்றார்.

     "மொழிச்சிக்கல் ஒரு திருக்கான செய்தி" என்றார் அவர். சென்னை முதலமைச்சர் திரு. அண்ணாதுரையொடு இதுபற்றிச் சில சமையங்களில் அவர் பேசி இருக்கின்றார். மீண்டும் அவர் தில்லிக்கு வரும்போது அவரொடு பேசலாமென் றிருக்கிறார்.

     இவ்வறிக்கையில், திருவாட்டியார் இந்திரா காந்தியார் சென்னைப் பொது மக்களின் மொழிநிலைபற்றி வருந்தியதாகக் கூறும் கூற்று. தமி ழுக்குக் கூற்றாக (கூற்றுவனாக) இந்தியைப் புகுத்தத் திட்டமிட்டிருப் பதைத் தெளிவாகக் காட்டுதல் காண்க.

     2. அண்மையில் நிகழ்ந்த சென்னை இந்தி பரப்பற் கழகப் பட்டமளிப்பு விழாவில், பட்டம் பெற்ற ஒவ்வொருவரும் ஓர் உறுதி மொழியைப் படிக்குமாறு எழுதிக் கொடுக்கப் பட்டிருக்கின்றது. படித்தி ருக்கின்றனர். அவ் வுறுதிமொழியின் ஒரு பகுதி வருமாறு :-

     "இத் தேச ஒற்றுமைக்கு ஒரு தேசியமொழி வேண்டியுள்ளது. இதற்கு எல்லா மொழிகளுள்ளும் மிகப் பொருத்தமானது இந்தியே. இதை நான் ஒப்புக்கொள்கிறேன்..."