பக்கம் எண் :

91

16
உண்மைத் தமிழர் அனைவர்க்கும்
உறைத்த எச்சரிக்கை

     பயிர் தழைத்துவரும்போதே பக்கத்துக் களைகளும் வளர்ந் தோங்கி வந்து நெருக்கிக் கெடுப்பதுபோன்று, மூவாயிரம் ஆண்டாக ஆரியச் சூழ்ச்சியால் மறைந்தும் குறைந்தும் நலிந்தும் நறுங்கியும் அளவிலா அல்லற்பட்டு வந்த தமிழ், மறைமலையடிகள் காலத்தினின்று மறுமலர்ச்சி யடைந்துவரும் இந்நாளில், தக்க அறிவும் ஆராய்ச்சியு மின்றிப் பட்டம் பதவிகளையே துணைக்கொண்டும், குன்றன்ன பொரு ளீட்டுவதையே குறிக்கொண்டும், பகைவர் பாங்காகிக் குமரிநாட்டுத் தீந்தமிழைக் குலைத்துவரும் வையாபுரிகள் கை ஓங்கிவருவது, மிகமிக அஞ்சத்தக்க தீக்குறியாம்.

     தமிழ்ப்பெயர் தாங்காமை, தமிழ்த்தூய்மை போற்றாமை, முக்கழக வுண்மையை ஒப்புக்கொள்ளாமை, இந்தியெதிர்ப்பில் ஈடுபடாமை, சமற் கிருத வழிபாட்டைத் தடுக்காமை இவ்வைந்தும் தலையாய வையா புரிகளின் பண்புகளாம்.

    
 

"உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டாம்
உடன்பிறந்தே கொல்லும் "பிணிகள்" - உடன்பிறவா
மாமலையி லுள்ள மருந்தே பிணிதீர்க்கும்
ஆமருந்து போல்வாரு முண்டு"

     பொருளீட்டுவது வேறு; புலந்தொகுப்பது வேறு. இவ்விரண்டும் தம்முள் முரண்பட்டவை. அதனாலேயே,

"இருவே றுலகத் தியற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு."                         (குறள். 374)

என்றார் திருவள்ளுவர்.

 

"நாவின் கிழத்தி யுறைதலிற் சேராளே
பூவின் கிழத்தி புலந்து."

என்றார் நாலடியார்.

     பொருளீட்டுவது ஒருவரின் தனியுரிமையே. ஆயின், தமிழைக் கெடுத்துப் பொருளீட்டுவது ஒருவர்க்கும் உரிமை யன்று. தன்னலத்தார் எத்தகைக் கட்புல வுண்மையையும் மறுக்க அஞ்சார் என்பதை,