பக்கம் எண் :

99

19
மனோன்மணீய ஆசிரியர் சுந்தரனார்
தமிழ் வாழ்த்தை இனிப் பாடவேண்டிய முறை

    

நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் முகமெனவே திகழ் நாவற் கண்டமிதில்
தக்கசிறு பிறைநுதலும் தாங்குநறும் பொட்டணியும்
தெக்கணமும் அதிற்சிறந்த தென்மொழிநற் றிருநாடும்
அத்தகும் பொட் டருமணம்போல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெரும் தமிழணங்கே!
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமுந் துளுவும்
உன்வயிற்றிற் பிறந்தெழுந்தே ஒன்றுபல வாயிடினும்
ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!           குறிப்பு:-

     (1) இருள் கவிந்த தமிழ் வானின் விடிவெள்ளி போன்றும், ஆரிய அடிமைத்தனத்தில் அயர்ந்துறங்கும் தமிழனுக்குப் பள்ளியெழுச்சி பாடும் அகவன் போன்றும், தனித்தமிழ் வேந்தர் மறைமலையடிகட்கு முன்சென்று கட்டியங்காரன் போன்றும் தோன்றியவர் சுந்தரனார். அவரையறியாது ஒரு சில வடசொற்கள் அவர் பாடலிற் புகுந்துவிட்டன. அது அவர் விரும்பிச் செய்ததன்று. இக்காலத்தில் அவர் இருந்தி ருப்பின், மேற்காட்டியவாறே பாடியிருப்பார் அல்லது திருத்தி யிருப்பார்.

     (2) அவர் பாடலில் "ஆரியம் போல்... சிதையாவுன்" என்பதே உயிர் நாடியான அடி. அதை நீக்கின், அது அவர் பாடலா காது. அதோடு அவருக்கும் தமிழுக்கும் பேரிழுக்கான பெருங்குற்றமாகும்.