தமிழ்நாட்டு விளையாட்டுகள் | 1 |
1 இளைஞர் பக்கம் | 1. ஆண்பாற் பகுதி | ஏறத்தாழ 5 அகவை முதல் 25 அகவை வரையுள்ளோர் ஆடும் விளையாட்டுத் தொகுதி இளைஞர் பக்கம் ஆகும். (அகவை = வயது.) | (1) பகலாட்டு | 1. கோலி | (1) பாண்டிநாட்டு முறை | ஆட்டின் பெயர் : கல்லாலுங் கண்ணாடியாலும் இயன்ற சிற்றுருண்டைகளைத் தெறித்தும் உருட்டியும் ஆடும் ஆட்டு, கோலி எனப்படும். (கோலி =உருண்டை). | ஆடுவார் தொகை : சிறுவருள்ளும் இளைஞருள்ளும், பெரும்பான்மை இருவரும் சிறுபான்மை மேற்பட்டவரும் இதை ஆடுவர். | ஆடுகருவி : ஒன்றற்கொன்று ஏறத்தாழ நாலடித் தொலைவில், அகலளவான வாயும் ஓரங்குல ஆழமுமுள்ளனவாக, வரிசையாய் நிலத்திற் கில்லப்பட்ட மூன்று குழிகளும், ஆடகன் ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு கோலியும், இதற்குரிய கருவிகளாம். கோலியாட்டின் ஏனை முறைகட்குரிய குழியும், இங்குக் கூறப்பட்ட அளவினதே. | | |
|
|