10 | தமிழ்நாட்டு விளையாட்டுகள் |
ஒருவனது கோலி முதலிலேயே குழிக்குள் விழுந்து விட்டால் ஒன்பது என்னும் எண்ணாம். அதன் பின் எதிரியின் கோலியை அடித்துவிட்டால் பத்தாம்.அது பழமாகும். அதோடு ஓர் ஆட்டை முடியும். | முதலிற் குழிக்குள் விழாவிட்டால், குழிக்குக் கிட்ட இருக்கிற கோலிக்காரன் முந்தியாடல் வேண்டும். அவன் எதிரியின் கோலியை அடிக்கலாம்; அல்லது குழிக்குட் போடலாம். எதிரியின் கோலியைத் தவறாது அடித்துவிடின் ஐந்தாம்; அங்ஙனமின்றிக் குழிக்குட் போட்டுவிடின் நான்காம். | நான்காம் எண்ணிலிருந்து தொடங்கினும் ஐந்தாம் எண்ணிலிருந்து தொடங்கினும், பத்தாம் எண்வரை தொடர்தல் வேண்டும். சில எண்கட்குக் குழியும் சில எண்கட்கு அடியும் ஆகும். குழி என்பது குழிக்கு அடித்தல். நான்காம் எண்ணிலிருந்து தொடங்கின் 5, 8, 9, 10 என்பன அடியாம்; 6, 7 என்பன குழியாம்;ஐந்தாம் எண்ணிலிருந்து தொடங்கின் 6, 7 என்பன குழியாம்; 8, 9, 10 என்பன அடியாம். பத்தாவது, கோலியை அடித்தற்குப் பதிலாகக் குழிக்குள் அடிப்பின், மீண்டும் நான்காம். | குழிக்குள் அடிக்கும் போதும் காயை (அதாவது எதிரியின் கோலியை) அடிக்கும்போதும் தவறிவிடின், அடுத்தவன் ஆடல் வேண்டும். ஆடும்போது, ஐந்தாம் எண் முதல் பத்தாம் எண்வரை ஒவ்வோர் எண்ணிற்கும் ஒவ்வொரு மரபுத் தொடர்மொழி கூறிக்கொள்வதுண்டு. அவை, அஞ்சல குஞ்சம், அறுவக்க தாடி, எழுவக்க மைனா, எட்டசுக் கோட்டை, (எட்டோடட்டக் கோட்டை) | தொம்பனிப் பேட்டை, (தொம்பரப் பேட்டை, தொம்பலப்பாடி). | தொசுக்கட்டுராசா, (தேசிங்குராசா, சம்பாவிழுந்தது) என்பனவாம். | | |
|
|