106 | தமிழ்நாட்டு விளையாட்டுகள் |
மிதித்து, சில்லி விழுந்த கட்டத்தில் ஒரு காலால் நின்றுகொண்டு, "பழம் போட்டுவிட்டுச் செல்லவேண்டுமா? வந்து பழம் போட வேண்டுமா?" என்று எதிரியாரை வினவி, முன்னது குறிப்பின் போட்டுவிட்டு நொண்டியடித்து முன்வரவேண்டும்; பின்னது குறிப்பின் நொண்டியடித்து அரங்கிற்கு முன்புறமாக வந்தபின் சென்று போடவேண்டும்; போட்டபின் ஆட்டை முடியும். | 'நொண்டி'யிலும் 'அமரேசா'விலும் தவிர, பிற பகுதிகளில் மலைக்குச் செல்வதில்லை. | ஆட்டத்தில் தவறும் வகையும், அதன்பின் நிகழும் செயலும், பிற சில்லிகட்குக் கூறியவையே. | ஓர் ஆட்டையில் வென்றவர் அடுத்த ஆட்டையில் முந்தியாடுவர். | IV. வட்டச் சில்லி | ஆட்டின் பெயர் : வட்டமான அரங்கு கீறி ஆடும் சில்லி வட்டச் சில்லியாம். | | |
|
|