3 பெரியோர் பக்கம் |
இளைஞருக்கு மேற்பட்ட இடைஞரும் முதியோரும் ஆடும் ஆட்டுத் தொகுதி பெரியோர் பக்கமாம். |
1. ஆண்பாற் பகுதி |
(1) பகலாட்டு |
தாயம் |
இது பலவகைப்படும். அவற்றுள் பெருவழக்கானது பதினைந்து நாயும் புலியும் என்பதாம். இது தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே ஆடப்பட்டதென்பது, |
"வல்என் கிளவி தொழிற்பெயரியற்றே" (தொல். 373) |
"நாயும் பலகையும் வரூஉங் காலை ஆவயின் உகரங் கெடுதலு முரித்தே உகரங் கெடுவழி அகரம் நிலையும்" (தொல். 374) |
என்னும் நூற்பாக்களால் (சூத்திரங்களால்) அறியலாம். |