பக்கம் எண் :

தமிழ்நாட்டு விளையாட்டுகள்15

     உத்தியில் நின்று அடித்தவன் அதைவிட்டு நீங்கும்போது, மூடியை மிதிக்காது ஓரெட்டுப் பின்வைத்து இடமாகவாவது வலமாகவாவது சுற்றி முன்வரல் வேண்டும்; அங்ஙனமன்றி மூடியை மிதித்துவிடின் தவறினவனாவன்.
     ஆடுகிறவன் அடித்த கோலியும் இன்னொன்றும் அரங்கிற்குள் ஒன்றையொன்று தொட்டுக்கொண்டு நிற்பின், அவன் அவற்றுள் ஒன்றை இன்னொன்று அலுக்காதவாறு எடுத்தல் வேண்டும். அலுக்கிவிடின் தோற்றவனாவன். அலுங்காமல் எடுத்தற்காக இரண்டிற்கும் இடையில் சிறிது மண்ணைத் தூவுவது வழக்கம். ஆட்டிற் கெலித்தவன் மறு ஆட்டையில் முந்தியாடல் வேண்டும். ஆடகர் பலராயின், தோற்றவன் நீங்கி வேறொருவன் எதிரியாவன்.
     ஆட்டின் பயன் : குறிதப்பாமல் உருட்டியடிக்கப் பயில்வதும், ஒன்றையொன்று தொட்டுநிற்கும் பொருள்களுள் ஒன்றைப் பிறிது அல்லது பிற
அலுக்காதவாறு எடுக்கப் பழகுவதும், இவ் வாட்டின் பயனாம்.

IV. முக்குழியாட்டம்

(i) சேலம் வட்டார முறை
     ஆட்டின் பெயர் : சுவரடி யரங்கிற்குள் இருகுழிக்குப் பதிலாக முக்குழி வைத்தாடும் கோலியாட்ட வகையே முக்குழியாட்டம்.