பக்கம் எண் :

30தமிழ்நாட்டு விளையாட்டுகள்

7. பஞ்சுவெட்டுங் கம்படோ

     ஆட்டின் பெயர் : நீந்தத் தெரியும் சிறுவர் நீரில் நின்று "காயா பழமா?" என்று கேட்டு ஆடும் ஆட்டு, அக் கேள்வியையே பெயராகக் கொண்டது.
     ஆடுவார் தொகை : இதை ஆட இருவர் வேண்டும்.
     ஆடிடம் : மணற் குவியலில் மட்டும் இது ஆடப்பெறும்.
     ஆடுமுறை : ஒருவன் இன்னொருவனை மணலிற் படுக்க வைத்துத் துணியாற் போர்த்து அவனது உடலின் கீழ்ப்பகுதியை மணலால் மூடிப் "பஞ்சுவெட்டுங் கம்படோ தோலே தோலே, பருத்திவெட்டுங் கம்படோ தோலே தோலே" என்று மடக்கி மடக்கிச் சொல்லி மெல்ல மெல்ல அவன் முதுகில் தட்டிக் கொண்டேயிருப்பன். சிறிது நேரம் பொறுத்துப் படுத்தவன் எழுந்துவிடுவான்.
     ஆட்டுத் தோற்றம் : போரில் தோற்றோடினவருள் ஒரு சாரார், தம்மைத் தொடர்ந்து வரும் வெற்றி மறவரினின்று தப்பிக்கொள்ளும் பொருட்டு நடித்த
நடிப்புகளுள் ஒன்றன் போலியாக, இவ் ஆட்டுத் தோன்றியதோவென ஐயுற இடமுண்டு.