பக்கம் எண் :

தமிழ்நாட்டு விளையாட்டுகள்37

     பின்பு, இரண்டாம் வட்டத்திலிருந்து முதல் வட்டத்திற்கு, முன்போன்றே அப் பம்பரம் அடித்துக்கொண்டு போகப்படும். அங்கு அதை இவ்விரு தடவை
குத்துவர்.
     அதன்பின், அது இரண்டாம் வட்டத்திற்கு மீண்டுங் கொண்டுபோகப்பட்டு, மும்மூன்று தடவை குத்தப்படும். இங்ஙனம் இங்குமங்குமாக இயக்கப்பட்டு,
ஒவ்வொரு முறைக்கும் ஒவ்வொரு தடவை கூடுதலாகக் குத்தப்படும்.
     இவ்வகையில் இது விரும்பிய அளவு தொடர்ந்து ஆடப்பெறும்.