(2) இரவாட்டு |
இங்கு, இரவென்றது கண்தெரியும் நிலாக்காலத்திரவை. நிலவொளி யில்லாதவிடத்துத் தெரு விளக்கொளியிலும் சில ஆட்டுகள் ஆடப்பெறும். |
1. குதிரைக்குக் காணங்கட்டல் |
ஆட்டின் பெயர் : குதிரைக்குக் காணங்கட்டி அவற்றின் மேல் ஏறுவதாகப் பாவித்துக்கொண்டு, ஒரு கட்சியார் இன்னொரு கட்சியார்மேல் ஏறி விளையாடுவது குதிரைக்குக் காணங்கட்டல். காணங்கட்டுதலாவது கொள்வைத்தல். |
ஆடுவார் தொகை : பொதுவாக, எண்மர்க்கு மேற்பட்ட சிறுவர் இதை ஆடுவர். |
ஆடுகருவி : ஓர் ஆடைத்துண்டை முறுக்கிப் பின்னிய திரி இதற்குரிய கருவியாம். ஏறத்தாழ ஐந்து கசம் இடையிட்ட இரு சமதூரக் கோடுகளைக் கீறி, அவற்றை எதிரெதிராக நின்று ஆடும் இரு கட்சியாரும் தத்தம் மனையெல்லை என்பர். |
ஆடிடம் : ஊர்ப் பொட்டலும் அகன்ற தெருவும் இதை ஆடுமிடமாம். |
ஆடுமுறை : ஆடுவார் எல்லாரும் முதலாவது உத்தி கட்டிச் சமத்தொகையான இருகட்சியாகப் பிரிந்து கொள்வர். |
முந்தியாட வேண்டுமென்று துணியப்பட்ட கட்சியாருள் ஒருவன், திரியின் ஒரு முனையைத் தன் வலக்காற் பெருவிரற்கும் அடுத்த விரற்கும் இடையில் இடுக்கி, இரு கையையும் நிலத்தில் ஊன்றி, கரணம் போடுவதுபோற் காலைத்தூக்கித் திரியை எதிர்க்கட்சியாரின் மனைக்குள் காலால் எறிவான்.அதை |