செல்லும் கதிர்களைக் கவர்தலும். கிளி ஓடிப்போதல் கொய்த கதிரைக் கௌவிக்கொண்டு கிளிகள் எட்டாத உயரத்தில் பறந்துவிடுதல். |
விளையாட்டிற்கேற்பச் சில செய்திகள் மாற்றவும் கூட்டவும் பட்டுள்ளன. |
விளையாட்டின் பயன் |
1. பகைவருக்குப் பிடிகொடாமல் தப்பப் பழகுதல். |
2. பகைவனையும் திருடனையும் ஓடும்போதுபடைக்கலத்தால் தாக்கப் பயிலுதல். |
3. வேகமாய் ஓடுந்திறனை அடைதல். |
4. கிளிகளால் விளையுளுக்குக் கேடு வராதவாறு முன்விழிப்பாக இருத்தல். |
குறிப்பு : கிளித்தட்டு விளையாட்டினைச் சோழநாட்டார் உப்புக்கோடு என்பர். |