பக்கம் எண் :

94தமிழ்நாட்டு விளையாட்டுகள்

III. அரசனும் மந்திரியும் சேவகனும்

     ஆட்டின் பெயர் : அரசனும் மந்திரியும் சேவகனும் என மூவர் ஆடும் பண்ணாங்குழியாட்டுவகை, அவர் புனைபதவிப் பெயரையே பெயராகக் கொண்டது.
     ஆடுகருவி : கட்டுக்கட்டற்குப் போன்றே, இரு சமவரிசை யாகவுள்ள பதினான்கு குழிகளும், குழிக்கைந்தாக அவற்றிற்கு வேண்டிய கற்களும், இதை ஆடுகருவியாம்.
     ஆடுமுறை : இரு வரிசைக் குழிகளுள்ளும், நடு இரு மூன்று அரசனுடையனவென்றும், இடப்புற ஈரிரண்டு மந்திரியுடையன வென்றும், வலப்புற ஈரிரண்டு சேவகனுடையனவென்றும் கொண்டு, அரசன் மந்திரி சேவகன் என்ற வரிசையொழுங்கில், ஆடகர் மூவரும் ஆடல் வேண்டும்.
     ஒவ்வொருவரும், தாந்தாம் ஆடும் ஒவ்வொரு தடவையும், தத்தம் குழியிலிருந்தே தொடங்கி ஆடல்வேண்டும். ஆயின், எல்லார் குழிகளிலும் வரிசைப்படி கற்களைப் போடலாம். ஒவ்வொன் றாகக் கற்களைப் போட்டு முடிந்த பின், கடைசியாகப் போட்ட குழிக்கு அடுத்த குழியிலுள்ள கற்களையெடுத்து முன்போல் ஆடவேண்டும். கடைசியாகப் போட்ட குழிக்கு அடுத்த குழி வெறுமையாக இருப்பின் அதைத் துடைத்து அதற்கடுத்த குழியிலுள்ள கற்களையெல்லாம் எடுத்து வைத்துக்கொள்ளலாம். அதன்பின் அடுத்தவர் ஆடல்வேண்டும். கடைசியாகப் போட்ட குழிக்கு அடுத்த இரு குழிகளும் வெறுமையாக இருப்பின், ஆடுபவர் ஒன்றும் எடுக்காமலே நின்றுகொள்ள வேண்டும். வெறுங்குழிக்கு