பக்கம் எண் :

தமிழ்நாட்டு விளையாட்டுகள்97

2. பாண்டி

(1) பாண்டிநாட்டு முறை

     ஆட்டின் பெயர் : பல கட்டங்களுள்ளதாய் நிலத்திற் கீறப் பட்ட அரங்கினுள் வட்டெறிந்து, அதை நொண்டியடித்துக் காலால் தள்ளியாடும் ஆட்டு, பாண்டி எனப்படும்.

     இவ் விளையாட்டு, ஏனையிரு தமிழ்நாடுகளிலும், வட்டு என்றும் சில்லி என்றும் சில்லாக்கு என்றும் எறிகருவியாற் பெயர் பெற்றிருப்பதால், ஒருகால் பாண்டி என்பதும் எறிகருவிப் பெயராய் இருக்கலாம்.
     பாண்டில் என்னுஞ் சொல் வட்டம் என்று பொருள்படுவதால், அதன் கடைக்குறையான பாண்டி என்பதும் அப் பொருள் படலாம். வட்டு சில்லி (சில்லாக்கு) என்னும் பெயர்கள், வட்டம் என்னும் பொருளையே மொழிப் பொருட் காரணமாகக் கொண்டிருப்பது போல், பாண்டி என்பதும் கொண் டிருக்கலாம்.
     பாண்டி விளையாட்டிற்கு வட்டு அல்லது வட்டாட்டு என்பது பழம் பெயர். இன்றும் பழஞ்சேர நாடாகிய மலையாளத்தில் அப் பெயரே வழங்குகின்றது.
     ஆடுவார் தொகை : இதை இருவர் ஆடுவர். இது ஏனை வகைகட்கும் ஒக்கும்.