கேட்டுப் பாருங்கள் அங்குள்ள தமிழ்ப்புலவர்களை! கேட்டுப்பாருங்கள் திராவிட மொழியாராய்ச்சி குழுவில் உள்ள இராமநாதன் முதலிய தூயதமிழ்ப் புலவர்களை. தமிழுணர்வு மிகுந்த காலம் இது! தமிழர் தம் நிலையைக் கூர்ந்து நோக்கி வரும் காலம் இது. வாழாது வாழ்ந்த ஓரினத்தை, ஒரு தனிமொழியை அடியோடு கவிழ்க்கும் வடவர் முயற்சியை முளையிலேயே கிள்ளிவிடுக! இல்லை எனில் பெருங்கொந்தளிப்பு ஏற்படும் தமிழ்நாட்டில், தமிழாராய்ச்சிக் குழுவில் மிகு பெரும்பாலோர் பார்ப்பனரும், அவர் அடிவருடிகளுமா? இதுபற்றித் தொடர்ந்து எழுதுவேன் விளக்கமாக!
|