பக்கம் எண் :

தமிழர் வரலாறு-21

கலவுநிலைக் காண்டம்

ஆரியர் இந்தியாவிற்குட் புகவு
(தோரா. கி.மு. 1500)

மேனாடுகளுள் முதற்கண் நாகரிகமடைந்தவை சுமேரியாவும் எகிப்தும் ஆகும்.

சுமேரியர், கொளுவுநிலை (Agglutinative)மொழி பேசிய துரேனிய அல்லது சித்திய இனத்தார்.பிற்காலத்திற் சேமிய வகுப்பார் சுமேரியாவைக்கைப்பற்றினர். சுமேரிய நாகரிக வழிப்பட்டதுபாபிலோனிய நாகரிகம். இரண்டிற்கும் உரிய நாடுமெசொப்பொத்தாமியா. அது தைகிரிசு ஐப்பிராத்துஎன்னும் ஈராறுகட் கிடையில், கீழைத்துருக்கிநீங்கலாக உள்ள நாடாகும். இன்று கிடைத்துள்ள முதற்பழஞ் சுமேரிய வெட்டெழுத்தின் காலம் கி.மு 3100,சுமேரிய மொழி கி.மு. 2000 வரை ஆட்சிமொழியாயிருந்தது. அதன்பின், பாபிலோனிய அக்கேடிய (Akkadian)மொழி அதன் இடத்தைக் கொண்டது.

தென் பாபிலோனிய அல்லது தென்கல்தேயத் (Chaldean)தலைநகரான ஊர் என்னும் நகர் இருந்த இடத்துஅகழ்வில், கி.மு. 3000 ஆண்டிற்கு முற்பட்டசேரநாட்டுத் தேக்கு உத்தரம் எடுக்கப்பட்டுள்ளது.நிலாத் தெய்வத்திற்கு அங்கொரு கோவிலும்இருந்ததாகச் சொல்லப்படுகின்றது. பாண்டியர்திங்களைத் தம் குடிமுதலாகக் கொண்டிருந்ததனால்,முதற்காலத்தில் அதைத் தெய்வமாகவும்வணங்கியிருத்தல் வேண்டும். பொதுமக்களும் அதைவணங்கியதைப் ‘பிறைதொழுகென்றல்‘ என்னும்அகப்பொருட் டுறையால் அறியலாம். பூம்புகாரில் ஒருநிலாக்கோவில் இருந்தது.

"நிக்கந்தக் கோட்டம் நிலாக்கோட்டம் புக்கெங்கும்" 

(சிலப்.9:13)

பாபிலோனியர் கைக்கொண்ட பிறதமிழப் பழக்கவழக்கங் களை, 'தமிழர் தோற்றமும்பரவலும்' என்னும் (ஆங்கில) நூலிற் காண்க.