பக்கம் எண் :

தமிழர் வரலாறு-2113

செம்படவன்

தொழில் - ஆறு குளம் ஏரிகளில் மீன்பிடித்தல், கடல்மீனும் கருவாடும் விற்றல், ஓடமும்பரிசலும் விடுதல்.

பிரிவு - ஏழ் நாடுகள் அல்லது புறமணப்பிரிவுகள்.

தலைவன் பட்டம் - நாட்டான்,நாட்டாண்மைக்காரன்.

குலப்பட்டம் - நாட்டான், கவுண்டன்,மணியக்காரன், பகுத்தார், பிள்ளை.

பயிரிடும் சிலர் குக வெள்ளாளர் எனல்.

தேவடியாள்

தொழில் - கோவில் தொண்டும்பரத்தைமையும்.

வகைகள் - தேவகணிகையர்,நேர்ந்துகொண்டோர், வறுமை யால்அடிமைப்பட்டோர், குலவழக்கத்தால் ஆனோர்,ஆரியப் பூசாரியரால் வேண்டப்பட்டோர்,இவ்வகையாரின் வழியில் வந்தோர்.

தேவனுக்கு அடியாள் என்னும் சிறந்தபெயர் ஒழுக்கக் கேட்டால் இன்று இழிவடைந்துள்ளது.

தொண்டைமான்

பெயர் - தொண்டைமான்,சுண்ணாம்புக்காரன்.

தொழில் - சுண்ணாம்புக்கல் நீற்றல்,மேளம் தட்டுதல், இசைக் குழலூதல்.

பட்டம் = சோழகன்.

நளவன்

தொழில் - கள்ளிறக்குதல்(யாழ்ப்பாணம்).

பட்டணவன்

இடம் - கிருட்டிணாமுதல் தஞ்சைவரைகடற்கரை.

பெயர் - பட்டணவன், கரையான்.

தொழில் - கடல்மீன் பிடித்தலும்வாணிகமும்.

பிரிவு - பெரிய பட்டணவர் x சின்னப்பட்டணவர்.

பட்டம் - செட்டி.