பக்கம் எண் :

136தமிழர் வரலாறு-2

"இரவா ரிரப்பார்க்கொன் றீவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர்." 

(குறள்.1035)

"ஆவிற்கு நீரென் றிரப்பினு நாவிற்(கு)
இரவி னிளிவந்த தில். 

(குறள்.1066)

நக்கீரர் தமிழ்ப் பெருமை காப்பு

(கி.பி. 2ஆம் நூற்றாண்டு)

"ஆரிய நன்று தமிழ்தீ தெனவுரைத்த
காரியத்தாற் காலக்கோட் பட்டானைச் - சீரிய
அந்தண் பொதியி லகத்தியனா ராணையாற்
செந்தமிழே தீர்க்கசுவா கா."

நாற்பால்பற்றி ஒளவையார்சோழனுக்குக் கூறியது

(தோரா. 12ஆம் நூற்.)

"நூலெனிலோ கோல்சாயும் நுந்தமரேல்வெஞ்சமராம்
கோலெனிலோ வாங்கே குடிசாயும் - நாலாவான்
மந்திரியு மாவான் வழிக்குத் துணையாவான்
அந்த வரசே யரசு"

தமிழிலக்கணச் சிறப்பை எடுத்துரைத்தமுனிவர்

"கண்ணு தற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து
பண்ணு றத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமிழ் ஏனை
மண்ணி டைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல்
எண்ணி டைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ."

என்று பாடினார், திருவிளையாடற் புராணஆசிரியர் பரஞ்சோதி முனிவர் (16 ஆம் நூற்.).

தென்மொழியின் தாழ்வு நீக்கியமுனிவர்

"இருமொழியும் நிகரென்னும் இதற்கையம்உளதேயோ"

என்று பாடி, வடமொழியையும்தென்மொழியையும் சமப்படுத்தி யவர் சிவஞானமுனிவர் (16 ஆம் நூற்.).


ஆங்கிலராட்சியும் அதன் நன்மைகளும்

ஆங்கிலராட்சி, 18ஆம்நூற்றாண்டிடையில் தோன்றி, இவ் விருபதாம்நூற்றாண்டிடையில் நீங்கியது. அரசினர்அலுவலகங்களிலும், பெருஞ்சாலைகளிலும்,பொதுவிடங்களிலும், புகைவண்டிகளிலும்,மின்வண்டிகளிலும், உயர்கல்வி நிலையங்களிலும்வகுப்பு வேற்றுமை நீக்கப்பட்டது. ஆங்கிலக் கல்விஎல்லா வகுப்பார்க்கும்பொது வாயிற்று. எல்லாத் துறையிலும்பொய்யும் புரட்டும் கட்டுங்