பக்கம் எண் :

தமிழர் வரலாறு-2145

நயன்மைக் கட்சி யமைச்சர்,எறும்புக்கடி போன்ற பிரித்தானியத் தினும்பாம்புக்கடி போன்ற பிராமணியம் கொடிதென்றும்,ஆங்கிலர் ஒருகாலும் இந்தியாவினின்று நீங்காரென்றும் கருதினதனால், ஆங்கிலராட்சிக்குமாறாகப் பேசினவரையும் ஒழுகினவரையும் தடியடியடித்தும் சிறையிலிட்டும் துன்புறுத்தினர். இதுபொது மக்கட்கு நேரிற் சொல்லப்பட்டபோதுஅவர்க்குச் சினம் மூண்டது. அதனால் தேசியக் கட்சிவிரைந்து வளர்ந்தது. இறுதியில், பிரா மணரல்லாதகாந்தியடிகள் முனிவர் கோலம் பூண்டு, தாழ்த்தப்பட்டவரை யணைத்துப் பொதுமக்களொடு தொடர்புகொண்ட பின், வெற்றி கிட்டிற்று; விடுதலையும்கிடைத்தது. விடுதலைப்பற்றும் நாட்டுமொழி யறிவும்பொதுமக்கள் தொடர்பும் இன்மையால், நயன்மைக்கட்சித் தலைவர் 1937ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலிற் படுதோல்வி யடைந்தனர். பேராயம்ஆட்சியைக் கைப்பற்றியது.

தனித்தமிழ் முன்னோடியர் இருவர்

நாட்டுப்பற்றிற்கு உயிர்மொழிப்பற்று. முன்னது எல்லார் வாயிலாகவும்வெளிப்படும்; பின்னது புலவர் வாயிலாக மட்டுமேவெளிப்படும்.

இந் நூற்றாண்டுத் தொடக்கத்தில், சூரியநாராயண சாத்திரியார் தம் பெயரைப் பரிதிமாற்கலைஞன் என்று மாற்றி, மறுமலர்ச்சித்தனித்தமிழ்த் தொண்டைத் தொடங்கிவைத்தார்.

பாம்பன் குமர குருதாச அடிகள்,சேந்தன் செந்தமிழ் என்னும் ஐம்பான் வெண்பாத்தனித்தமிழ் நூலியற்றி, நூற்றுக்கணக்கானவடசொற்கட்கு நேர்த் தென்சொற்களும்மொழிபெயர்த்தும், ஆக்கியும் வைத்தார்.


தனிப்பெருந் தமிழ் மீட்பர் மறைமலையடிகள்

கல்விக் கடல்; தமிழ் ஆங்கிலம்சமற்கிருதம் ஆகிய மும்மொழி வல்லுநர்; மருத்துவம்,கருநூல் (Embryology),தொலைவுணர்வு (Telepathy),மனவசியம் (Mesmerism),அறிதுயில் (Hypnotism)முதலிய பல்கலை யறிஞர்; நூலாசிரியர்,நுவலாசிரியர், உரையாசிரியர், இதழாசிரியர்,பதிப்பாசிரியர், ஆய்வாசிரியர் ஆகிய பல்வகையாசிரியர்; அடக்கமும் அஞ்சாமையும் உண்மையொப்புக்கொள்வும் குலமத வேற்றுமை யின்மையும்கொள்கைக் கடைப்பிடிப்பும் கொண்டபண்பாட்டாளர்; நாட்டிற்கும் மொழிக்குமன்றித்தமக்கென வாழாப் பிறர்க்குரியாளர்; மாபெருந்தமிழ்ப் புலவரும் தமிழ்ப் பேராசிரியரும்தமிழுக்கும் வடமொழிக்கும் வேறுபாடு தெரியாது,நூற்றிற் கெண்பது விழுக்காடு வடசொற் கலந்துதமிழைப் பேசியும் எழுதியும் பாடியும் வந்தகாலத்தில், தமிழ்ப்பயிர் அயற்சொற்களால்நெருக்குண்டு அடியோடழிந்து போகவிருந்த நிலையில்,1916ஆம் ஆண்டிலிருந்து வடசொற்களை அறவே களைந்து, தூயதீந்தமிழில், உரைநடையும் செய்யுளுமாகிய இருவகைவடிவிலும், அறிவியல்,