பக்கம் எண் :

48தமிழர் வரலாறு-2

அரசர் 

-  நாடாள்வார்.

அறிவர் 

-  முக்கால அறிவினர், முற்காணியர் (Prophets)

ஆயர் 

-  ஆநிரை மேய்ப்போர், ஆடுமாடு மேய்க்கும் இடையர்.

இளையர் 

-  வேலைக்காரர்.

ஏரோர் 

-  உழவர்.

ஐயர் 

-  முனிவர்.

செவிலி 

-  அரசர் செல்வர் முதலிய பெருமக்கள் பிள்ளைகளின் வளர்ப்புத்தாய்.

கூத்தர் 

-  கூத்தாடுபவர், நடஞ்செய்பவர், நாடக நடிகர்.

துடியர் 

-  உடுக்கை யடிப்பவர்.

தேரோர் 

-  தேர்ப்பாகர்.

படைஞர் 

-  படைமறவர்.

பரத்தையர் 

- விலைமகளிர், பொதுமகளிர்.

பாகர் 

-  குதிரைப்பாகர் (வாதுவர்), யானைப் பாகர்.

பாங்கன்  

- அரசரின் அகப்பொருளொழுக்கத் தோழன்.

பாங்கி  

- அரசியரின் அகப்பொருளொழுக்கத் தோழி.

பாணர் 

-  இசைப்பாணர், குழற்பாணர், யாழ்ப்பாணர், மண்டைப்பாணர் ஆகிய இசைத் தொழிலார்

பார்ப்பார்  

- ஆசிரியர், புலவர், உவச்சர், குருக்கள் முதலிய இல்லறத்தாரான கல்வித் தொழிலார்.

பொருநர்  

- ஏர்க்களம் பாடுநரும் போர்க்களம் பாடுநரும்.

மறவர்  

- போருங் கொள்ளையுமாகிய மறத்தொழில் புரியும் பாலைவாணர், படைமறவர்.

வாணிகர் 

-  சில்லறையாகவும் மொத்தமாகவும் பண்ட மாற்றுச் செய்யும் நிலவாணிகரும், கடல் கடந்து வெளிநாட்டொடு வணிகஞ் செய்யும் நீர்வாணிகரும்.

விரிச்சி 

-  விரிச்சி (oracle) கூறுபவர். விள்- விடு - விடிச்சி - விரிச்சி = தெய்வத்தினிடமிருந்து மறைவான செய்திகளை அறிந்து வெளிப்படுத்துதல்.

வினைவலர் 

-  ஏவிய தொழில் செய்வதில் வல்லவர்.

விறலி 

-  விறல்(சத்துவம்)பட ஆடும் பாண்மகள்.

வேட்டுவர் 

-  வேட்டைத் தொழில் செய்யும் குறிஞ்சி, முல்லை பாலைவாணர்.