பக்கம் எண் :

தமிழர் வரலாறு-277

இஞ்சிவேர்-Gk. ziggiberis, L. zingiber, gingiber, OE. gingifer, gingiber, E. ginger.

OF. gingibre, gingimbre, Mod.F. gingembre, Pr. gingibre, gingebre, Sp. gengibre, agengibre, Pg. gengivre, It. zenzevero, zenzero, gengero, gengiovo.

Arab. zanjabil, MDu. gengber, D. gember, MHG. ingewer, Ger. ngwer, MLG. engewer, Da. ingefeer, Sw. ingefara.

கோழிக்கோட்டிலிருந்த (Calicut)ஏற்றுமதியான பருத்தித் துணி ஆங்கிலத்திற்கலிக்கோ (Calico) என்றுபெயர் பெற்றுள்ளது.


கடைக்கழகக் கால ஆரிய மீக்கூர்வு

பழங்குடிப் பேதைமை, மதப்பித்தம்,கொடைமடம் என்னும் முக்குற்றமும் ஒருங்கு கொண்டமூவேந்தரும், பகுத்தறிவைப் பயன் படுத்தாதுபிராமணரை முற்றும் பின்பற்றியதனால்,கடைக்கழகக் காலத்தில், மதவியல் குமுகாயவியல்மொழியியல் என்னும் முத்துறையிலும், ஆரியம் மிகவேரூன்றிவிட்டது.

(1) மதத்துறை

ஆரியப்படுத்தம்

தமிழர், நால் வேதங்களையும்நான்முகமாகக் கொண்டதனால், அவனைத் திருமாலின்(கொப்பூழினின்று பிறந்த) மகனென்று தமிழ்த்தெய்வத்துடன் இணைத்துவிட்டனர்.

"நீனிற வுருவின் நெடியோன் கொப்பூழ்
நான்முக வொருவற் பயந்த பல்லிதழ்த்
தாமைரப் பொகுட்டிற் காண்வரத் தோன்றி" 

(பெரும்பாண்.402-4)

ஆரிய வேதங்கட்கும் சிவனுக்கும்யாதொரு தொடர்பும் இன்றேனும், சிவனே வேதங்களையருளியதாகக் கூறப்பட்டது.

"நான்மறை முதுநூல் முக்கட் செல்வன்" 

(அகம்.181)

முதுகுடுமிப் பெருவழுதி, கரிகால் வளவன்,அரச வேள்வி (ராஜஸூய) வேட்ட பெருநற்கிள்ளி,பல்யானைச் செல்கெழு குட்டுவன், சேரன்செங்குட்டுவன் முதலிய தமிழவேந்தர், ஆவின்பாலிருக்க அங்கணநீர் குடிப்பார்போல்,கோவிலில் வழிபடும் பெருந்தேவ வழிபாட்டைவிட்டுவிட்டுக் கொலைவேள்வி செய்யும் சிறுதெய்வவழிபாட்டை மேற்கொண்டனர்.

"கடல்வளர் புரிவளை புரையு மேனி
யடல்வெந் நாஞ்சிற் பனைக்கொடி யோனும்" 

(புறம்.56)