பக்கம் எண் :

தமிழர் வரலாறு-295

கன்னார், வெண்கலக் கன்னார்), காழியர் (பிட்டுவாணிகர்), கானவர், கிணைவர் (கிணைப் பொருநர்),கிழியினும் கிடையினும் பல தொழில் செய்வார்,குயிலுவர் (தோலிசைக் கருவிகள் செய்வோர்),குறவர், குன்றவர், குறும்பர், கூத்தர், கூலவாணிகர்,கூவியர் (அப்ப வாணிகர்), கொல்லர், கோடியர்(கழைக்கூத்தர்), சங்கறுப்போர், சாக்கையர்,சாலியர் (நெசவர்), தச்சர், துடியர்,தேர்த்தச்சர், தையற்காரர் (துன்னகாரர்,சிப்பியர்), நுண்வினைக் கம்மியர், நுளையர்,பட்டினவர் (மீன்விலைப் பரதவர்), பட்டுச்சாலியர், படையுள் படுவோன் (சின்னமூதி), பரதர்(செட்டிகள்), பரதவர் (பரவர்), பரத்தையர்(இற்பரத்தையர், சேரிப்பரத்தையர்), பழையர் (கள்விற்கும் வலையர்), பறம்பர் (தோலின் துன்னர்),பறையர் (பறையறைந்து விளம்பரஞ் செய்வோர்),பாசவர் (ஊன் விற்போர்), பாணர் (இசைப்பாணர்,குழற்பாணர், யாழ்ப்பாணர், மண்டைப் பாணர்),பார்ப்பார், புலையர், பூ விற்பார், பொருநர்(ஏர்க்களம் பாடுநர், போர்க்களம் பாடுநர்),பொன்வாணிகர், மணவர் (வாசவர்), மணிகோப்பார்,மணிநகைத் தட்டார், மரக்கலக் கம்மியர், மழவர்(மழநாட்டு மறவர்), மறவர் (பாலை வாணர்),மாலைக்காரர், வண்ணார், வயிரியர் (ஒருவகைக்கூத்தர்), வலைஞர், வள்ளுவர் (அரசர் விளம்பரப்பறையர்), விலைமகளிர் (சிறுவிலை மகளிர், பெருவிலைமகளிர்),

"ஈமுங் கம்மும் உருமென் கிளவியும்" 

(தொல்.328)

"மின்னும் பின்னும் பன்னும் கன்னும்" 

(தொல்.345)

என்று தொல்காப்பியங் கூறுவதால்,அக்காலத்திலேயே ஐங்கம்மும் செம்பும்வெண்கலமுமாகிய இரு கன்னும் நடைபெற்றமைபெறப்படும். இளங்கோவடிகள்,

"கஞ்ச காரரும் செம்புசெய் குநரும்" 

(சிலப்.5:28)

என்று, இரு கன்னையும் வேறாகப்பிரித்து, வெண்கலக் கன்னை வட சொல்லாற்குறித்தார்.

பார்ப்பார் என்னும் தமிழ்ச்சொல்,கடைக்கழகக் காலத்தில் இல்லறத்தாரானபிராமணர்க்கே வரையறுக்கப்பட்டுவிட்டது.சிறப்பாகத் துறவியரைக் குறிக்கும் அந்தணர்என்னும் தமிழ்ச் சொல்லும், முதற்கண் பிராமணப்போலித் துறவியர்க்கு வழங்கி, பின்னர் இல்வாழ்பிராமணர்க்கும் வழங்கப்பட்டுவிட்டது.


குலங்கள் தோன்றிய வகைகள்

ஆரியர் (பிராமணர்) வருமுன் தோன்றியகுலங்களெல்லாம் தொழில்பற்றியனவே யாம்.