திரவிடத்தாய் | 1 | | மலையாளம் | | மலையாளப் பெயர் | | கேரளம், மலையாளம் என்பன தற்போது மலையாள நாட்டையும், அங்கு வழங்கும் மொழியையும் குறிக்கும் பெயர்களாம். | | கழக (சங்க)க் காலத்தில் முத்தமிழ் நாடுகளில் ஒன்றாயிருந்த சேரநாட்டின் மேல்பாகமே இப்போது மலையாள நாடா யிருக்கின்றது. கீழ்ப்பாகம் கொங்குநாடும் (கோயம்புத்தூர், சேலம் , கோட்டகப் பகுதிகள்), கங்கநாடும் (சேலம் மைசூர்ச் சீமைப் பகுதிகள்) ஆகும். மறன், திறன் முதலிய பெயர்கள் முறையே மறல், திறல் என்று திரிந்தாற் போல, சேரன் என்னும் பெயரும் சேரல் எனப் போலியாகிப் பின்பு 'அன்' ஈறு பெற்றுச் சேரலன் என வழங்கிற்று. | | எ-டு: சேரன் செங்குட்டுவன்; களங்காய்க் கண்ணி நார் முடிச் சேரல், தகடூர் எறிந்த பெருஞ்சேரல், குடக்கோ இளஞ் சேரல். | | | | "தென்னவன் சேரலன் சோழன்" (திருவாசகம்) |
| | | | | | "செறுமா வுகைக்கும் சேரலன் காண்க" (திருமுகப்பாசுரம்) |
| | | | சேரலன் என்னும் பெயர் முறையே கேரலன், கேரளன் என மருவிற்று, இம் மரூஉ வடிவங்கள் பழந்தமிழ் நூல்களில் ஓரிடத்துங் காணப்படவில்லை; பிந்திய நூல்களில்தாம் காணப்படுகின்றன. இதனால் இவை பிற்காலத்தன என்பது தெளிவு. | | ச-க, போலி. ஒ.நோ: சீர்த்தி-கீர்த்தி, செம்பு-கெம்பு (க.) ல-ள, போலி, ஒ.நோ: செதில் - செதிள், வேலை - வேளை. | | பாண்டியன் என்னும் பெயர் பாண்டியம் என ஈறு திரிந்து பாண்டியன் செய்திகளைக் குறித்தாற்போல, கேரலன் கேரளன் என்னும் பெயர்களும், கேரலம் கேரளம் என ஈறு திரிந்து சேர நாட்டையும், அந் நாட்டு மொழியையுங் குறிக்கும். |
|
|