பக்கம் எண் :

12திரவிடத்தாய்

திரவிடத்தாய்

கொடுந்தமிழ் நாடு பன்னிரண்டையும்,
 
 
 
"தென்பாண்டி குட்டங் குடங்கற்கா வேண்பூழி
பன்றி யருவா வதன்வடக்கு - நன்றாத
சீத மலாடு புனனாடு செந்தமிழ்சேர்
ஏதமில் பன்னிருநாட் டெண்"
 
 
 
என்னும் வெண்பாவாற் குறித்து, "தென்பாண்டி நாட்டார் ஆ எருமை என்பவற்றைப் பெற்றமென்றும்; குடநாட்டார் தாயைத் தள்ளையென்றும், நாயை ஞெள்ளை என்றும்; குட்டநாட்டார் தந்தையை அச்சன் என்றும்; கற்கா நாட்டார் வஞ்சரைக் கையர் என்றும்; சீத நாட்டார் ஏடா வென்பதனை எலுவன் என்றும், தோழியை இகுளை என்றும், தம்மாமி யென்பதனைத் தந்துவையென்றும்; பூழி நாட்டார் நாயை ஞமலியென்றும், சிறு குளத்தைப் பாழியென்றும், அருவா நாட்டார் செய்யைச் செறுவென்றும், சிறுகுளத்தைக் கேணியென்றும்; அருவா வட தலையார் குறுணியைக் குட்டையென்றும் வழங்குப"
 
என்று நச்சினார்க்கினியர் முதலியோர் காட்டுக் கூறியது கி.பி. 12ஆம் நூற்றாண்டிற் கேற்றதாதலின், கி.மு. 2000 ஆண்டுகட்கு முற்பட்ட தொல்காப்பியர் காலத்திற்கேற்காது.
 
"இனிச் சிங்களம் அந்தோ வென்பது; கருநடங்கரைச் சிக்க குளிர என்பன; வடுகு செப்பென்பது; துளு மாமரத்தைக் கொக்கென்பது; ஒழிந்தவற்றிற்கும் வந்துழிக் காண்க" என்று நச்சினார்க்கினியரும்;
 
"பன்னிரு நிலமாவன:.... பொங்கர் நாடு.... அருவா வடதலை என்ப. இவை செந்தமிழ் (சேர்ந்த) நாடென்றமையால் பிற நாடாதல் வேண்டுமென்பார் உதாரணங் காட்டுமாறு:..... பன்னிருநில மாவன:
 
"குமரியாற்றின் தென்கரைப்பட்ட பழந்தீபமும் கொல்லமும் கூபகமும் சிங்களமும், சையத்தின் மேற்குப்பட்ட கொங்கணமும் துளுவமும் குடகமும் குன்றகமும், கிழக்குப்பட்ட கருநடமும் வடுகும் தெலுங்கும் கலிங்கமும் என்று கொள்ளப்படும்.
 
"இவற்றுள், கூபகமும் கொல்லமும் கடல் கொள்ளப் படுதலின், குமரியாற்றின் வடகரையைக் கொல்லமெனக்