|
| தோன்றவும் பெறும். பொதுவாக, சுமார் 500 கல் தொலைவாயின் புதுச் சொற்கள் தோன்றுவதும் மொழி திரிவதும் இயல்பு. |
| |
(2) எழுத்தொலித் திரிபு |
| |
| இது தட்பவெப்பநிலை வேறுபாட்டாலும் சோம்பலாலும் நிகழ்வது . |
| |
| |
| |
ந - ஞ | ப - ஹ | ழ - ட - தட்பவெப்பநிலை | ஐ - அ | ஐ - எ | ண - ன - சோம்பல் | |
| |
| இனி ஊண், தொழில், பழக்கவழக்கம், அயன்மொழிக் கலப்பு முதலியவற்றாலும் எழுத்தொலி திரியும். எழுத்தொலித் திரிபு தட்பவெப்பநிலை ஊண் முதலியவற்றால் திரிவது கிளைமொழியாக்கத் (Dialectic variation)திற்குக் காரணமாம்; சோம்பலால் திரிவது ஒலிமுறைக் கேடாம் (Phonetic decay). |
| |
(3) சொல் திரிபு |
| |
(4) பொருள் திரிபு |
| |
எ-டு: | வெள்ளம் (த.) = வெள்ளையான புதுப்பெருக்கு நீர்; வெள்ளம் (ம.) = நீர். |
|
| |
(5) இயற்கைத் தெரிப்பு (Natural Selection)| தாய்மொழியாகிய தமிழில் வீட்டைக் குறிக்கும் ஒருபொருட் பல சொற்களில், தெலுங்கு இல் என்னுஞ் சொல்லையும், கன்னடம் மன என்னுஞ் சொல்லையும் தெரிந்துகொண்டன. | | (6) வழக்கற்ற சொல் வழங்கல் | | | எ-டு: | துன்னு = தை, (ம.), தெவு = தெகு(க.). நெய்த்தோர் = நெத்துரு (தெ.) |
| | | | வழக்கற்ற சொல் வழங்கலாவது தமிழில் இதுபோது பேச்சுவழக்கற்று எழுத்துவழக்கில் மட்டுமுள்ள சொற்கள் பிற திரவிட மொழிகளிற் பேச்சு வழக்கில் வழங்குவது. | |