பக்கம் எண் :

மலையாளம்49

திரவிடத்தாய்

நி.கா.
ஞான் செய்திருக்குன்னு
=
நான் செய்திருக்கிறேன்.
நீ செய்திருக்குன்னு
=
நீ செய்திருக்கிறாய்.
அவன் செய்திருக்குன்னு
=
அவன் செய்திருக்கிறான்.
எ.கா.
ஞான் செய்திருக்கும்
=
நான் செய்திருப்பேன்.
நீ செய்திருக்கும்
=
நீ செய்திருப்பாய்.
அவ செய்திருக்கும்
=
அவன் செய்திருப்பான்.
 
உண்டு இல்லை என்னும் துணைவினைகள்
 
எனிக்குண்டு=
எனக்குண்டு
எனிக்கில்ல=
எனக்கில்லை
நினக்குண்டு=
உனக்குண்டு
நினக்கில்ல=
உனக்கில்லை
அவனுண்டு=
அவனுக்குண்டு
அவனிக்கில்ல=
அவனுக்கில்லை
 
அல்ல என்னும் துணைவினை
 
ஞான் அல்ல
=
நான் அல்லேன்
நீ அல்ல
=
நீ அல்லை
அவன் அல்ல
=
அவன் அல்லன்
 
குறிப்பு :
தமிழிலும் உலக வழக்கில் அல்ல என்னும் பலவின்பால் வடிவம் வழுவாகஇருதிணை யைம்பால்மூவிடங்கட்கும் பொதுவாக வழங்கிவருகின்றது.
 
சில புணர்வினைகள்
 
அடுத்துவா, உண்டாகு, காத்திரு, கொண்டுவா, பறஞ்ஞூவெக்க, வைத்திரு, வெளிப்பெடு, கொண்டுபோ, தாணுபோக.
 
தன்வினை பிறவினையாகும் வழிகள்
 
(1)
பகுதி வலி யிரட்டல் - எ-டு: உருகு - உருக்கு,
உண்டாகு - உண்டாக்கு, மாறு - மாற்று.
(2)
பகுதி (மெலி) வலித்தல் - எ-டு: கலங்ஙு - கலக்கு.
(3)
விகுதி பெறுதல் - எ-டு: காண்-காணி (காண்பி) நீள்-
நீட்டு, கடி-கடிப்பி, சும - சுமத்து, காய் - காச்சு (காய்ச்சு).
 
குறிப்புப் பெயரெச்சங்கள்
 
வலிய (பெரிய), நல்ல, செறிய (சிறிய), பழய (பழைய), புதிய, சில, பல முதலியன.
 
குறிப்பு :
வினை யெச்சங்கள்- நன்னாயி, முழுவன், வேகம், முதலியன.