பக்கம் எண் :

மலையாளம்53

திரவிடத்தாய்

என்றே செரிப்பு வெடிப்பாக்கெணம் என்னு ஞான் திவஸந் தோறும் கல்பிக்குன்னென்கிலும், நீ இது ஒரிக்கலும் நன்னாயி செய்யாறில்ல = என்னுடைய செருப்பைத் துப்புரவாக்க வேண்டுமென்று நான் நாள்தோறும் சொன்னாலும் நீ இதை ஒருகாலும் நன்றாய்ச் செய்கிறதில்லை.
 
பழமொழிகள் (பழஞ்சொல் - ம.)
 
அகத்திட்டால் புறத்தறியாம்.
 
அரி (அரிசி) எறிஞ்ஞால் ஆயிரம் காக்க.
 
அளவு கடன்னால் அம்ருதும் நஞ்சு.
 
ஆகும் காலம் செய்தது சாகும் காலம் காணாம்.
 
ஆயிரம் மாகாணி அறுபத்து ரண்டர.
 
இக்கரனின்னு நோக்கும்போல் அக்கர பச்ச.
 
இரிம்பூர கல்லும் தேயும்.
 
ஈர் எடுத்தால் பேன் கூலியோ.
 
கடலில் காயம் கலக்கியது போலெ.
 
காமத்தின்னு கண்ணில்ல.
 
காற்றுள்ள போள் தூற்றணும்.
 
கார்யத்தின்னு கழுத காலும் பிடிக்கேணம்.
 
குரங்ஙின்றெ கய்யில் பூமால கிட்டியதுபோலெ.
 
குரக்குன்ன நாயி கடிக்கயில்ல.
 
கோடாதெ காணி கொடுத்தால் கோடி கொடுத்த பலம்.
 
கோடி கோடி கொடுத்தால் காணி கொடுத்த பலம்.
 
தாழே கொய்தவன் ஏறே சுமக்கேணம்.
 
தீயில்லாதெ புகயுண்டாக யில்ல.
 
நரி நரெச்சாலும் கடிக்கும்.
 
நிலாவினெ நோக்கி நாயி குரக்கும்போலெ.
 
பலதுள்ளி பெரு வெள்ளம்.
 
மரத்தின்னு காயி கனமோ?
 
மருன்னும் விருன்னும் மூன்னு நாள்.
 
மலர்ன்னு கிடன்னு துப்பியால் மாறத்து விழும்.
 
மீங்கண்டம் வேண்டாத பூச்சயில்ல.
 
ரண்டு தோணியில் கால் வெச்சுது போலெ.
 
    தாழ = அடியில். ஏற = மிகுதியாக.