|
| அங்கேதான் மாந்தன் தோன்றினானென்றும், ஊரும் உயிரிகள் கூட அங்கேதான் தோன்றினவென்றும், அது பன்னூறாயிரம் ஆண்டுகள் நிலைபெற்ற பின் பல கடல்கோள்களால் தென் பெருங்கடலில் மூழ்கி விட்டதென்றும் ஹெக்கேல், ஸ்காட் எலியட் முதலிய மேலையாராய்ச்சியாளர் கூறி, அதற்கு லெமூரியா, காண்டுவானா (Gondwana) என்ற பெயர்களையும் இட்டிருக்கின்றனர். |
| |
|   |
| |
| "வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி | பண்பில் தலைப்பிரித லின்று" (குறள். 955) |
|
| |
|   |
| |
| என்னுங் குறளுரையில், பழங்குடிக்கு எடுத்துக்காட்டாக, "சேர சோழ பாண்டியர் குடிபோலும் படைப்புக் காலந்தொட்டு மேம் பட்டு வருங் குடி" எனக் குறிப்பிட்டுள்ளார் பரிமேலழகர். |
| |
| முத்தமிழரசக் குடிகளுள் பாண்டியர் குடியே முதலாவது தோன்றியதென்றும், பின்பு முறையே சோழ சேரக் குடிகள் தோன்றினவென்றும் ஒரு வழிமுறைச் செய்தி வழங்கி வருகின்றது. |
| |
| வடமொழியில் முதற் பாவிய(காவிய)மாகிய வான்மீகி யிராமாயணத்தில் சேர சோழ பாண்டியர் மூவரும் கூறப்பட் டுள்ளனர். |
| |
| கி.மு. 2000 ஆண்டுகட்கு முன் எழுதப்பட்ட தொல் காப்பியத்திலேயே, |
| |
|   |
| |
| "போந்தே வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானையர் | மலைந்த பூவும் (பொருள். 60) |
|
| |
|   |
| |
| என்றும், |
| |
|   |
| |
| "வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்" (பொருள்.381) |
|
| |
|   |
| |
| என்றும் மூவேந்தர் குடிகளும், முதுகுடி எனத் தமிழ் மறவர் குலமும் பழைமையாகக் கூறப்பட்டுள்ளன. மறவர் குடியை, |
| |
|   |
| |
| "கற்றோன்றி மண்டோன்றாக் காலத்தே வாளோடு | முற்றோன்றி மூத்த குடி" (பு.பொ.வெ.35) |
|
| |
|   |
| |
| என்னும் புறப்பொருள் வெண்பா மாலையும். |
| |
| பல்லாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட தலைக்கழகம் முத்தமிழ்க் கழகமாயிருந்ததினால்; அதற்குமுன் முத்தமிழ் |