|
உரிச்சொற்கள் |
| |
| கடு (மிகு); வடி (கூர்) - வாடி; சால் - சாலு; சீர்த்தி, கீர்த்தி - கீர்த்தி. |
| |
| குறிப்பு: தமிழில் உரிச்சொல்லாயிருப்பவை தெலுங்கிலும் உரிச்சொல்லா யிருக்கவேண்டும் என்னும் யாப்புறவில்லை. உலகவழக்கற்ற செய்யுட் சொல்லே அல்லது செய்யுட் பொருள்பட்ட சொல்லே உரிச்சொல்லென் றறிக. |
| |
சொற்றொடர் |
| |
தனித்திரவிடச் சொற்றொடர் |
| |
| ஆ சின்னவாடு இப்புடு வ்ராஸ்துன்னாடு = அச் சிறுவன் இப்போது வரைந்து (எழுதிக்) கொண்டிருக்கிறான். |
| |
| எல்லுண்டி ஆவுலு ஆ பொலமுலோ மேஸ்தவி = நாளை நின்று ஆக்கள் அப் புலத்தில் மேயும். |
| |
| இதிவரக்கு செப்பின பனி நீவு சேயக போகா இங்க்கா பனி எட்லா இஸ்தானு = இதுவரைக்கும் சொன்ன பணி நீ செய்யாமலிருக்க (செய்யாது போக) இன்னும் பணி எப்படிக் கொடுக்கிறது (கொடுப்பேன்)? |
| |
| நேனு அதனிக்கி ஆ புஸ்தகமு இச்சினானனி மீத்தோ எவரு செப்பினாரு? நான் அவனுக்கு அப் பொத்தகத்தைக் கொடுத்தே னென்று உனக்கு எவர் சொன்னார்? |
| |
ஆரியங் கலந்த சொற்றொடர் |
| |
| நேனு ஆ பனி சேயலேக்க போயினந்துன, ஜீதமு இவ்வகுண்டா வெள்ளகொட்டினாடு = நான் அப்பணி (வேலை)யைச் செய்யாது போனதினால், எனக்குச் சம்பளம் ஈயாமல் (கொடாமல்) துரத்திவிட்டான். வெள்ளகொட்டு = போகடி. |
| |
| ஆயன பாக்யவந்துடை உன்னப்பட்டிக்கி, தரித்துருனிவலெ ப்ரவர்த்திஸ்துன்னாடு = அவர் செல்வராயிருந்தாலும் வறியவர் போல நடக்கிறார். |