English
|
English |
சமற்கிருதம் |
English |
சமற்கிருதம் |
|
generation |
ஜெனனம் |
str.(an old suffix) |
ஸ்திரீ |
|
gravity |
குருத்துவம் |
stand |
ஸ்தா
(root) |
|
house |
ஆசயம் |
shaving |
க்ஷவரம் |
|
heart |
ஹிருதயம் |
special |
விசேஷம் |
|
item |
இதம் |
seven |
சப்தம் |
|
inter |
அந்தர் |
six |
சஷ்டி |
|
idea |
ஐதீகம் |
sui |
சுயம் |
|
ignorance |
அஜ்ஞானம் |
serve |
சேவி |
|
ignition,ignis |
அக்னி |
she |
சா |
|
murther,murder |
ம்ருத் |
sweat |
ஸ்வேத |
|
mother |
மாதா |
terra |
தரை |
|
mediator |
மத்தியஸ்தர் |
tree |
தரு |
|
name |
நாமம் |
two |
த்வா |
|
nose |
நாசி |
three |
திரீ |
|
nine |
நவம் |
that |
தத்; |
|
person |
புருஷன் |
they- |
தே |
|
prime |
பிரதமம் |
voice,vocal |
வாக்கு |
|
preacher |
புரோகிதர் |
verto(root) |
விருத்தம |
|
science |
சாஸ்திரம் |
word |
வார்த்தை |
இனி இலக்கண ஒற்றுமைகளாவன:
1. மெய் மொழி முதலாதல்
2. ஒருமை இருமை பன்மை
என எண் மூன்றாதல்
3. பெயரெச்சங்கள்
பால் எண் வேற்றுமைகளைக் காட்டல்
4. இலக்கணப் பால்
(grammatical gender)
5. வினைமுற்றுகள் பால்
காட்டாமை
6. பயனிலை வினைச்சொல்லாயே
யிருத்தல்
இவை போன்றவை இன்னும்
எத்துணையோ உள. முக்கியமானவை மட்டும் இங்கு உதாரணமாகக் குறிக்கப்பட்டன.
ஆரியம் என்னும்
குறியீடு முதன்முதல் ஆரிய மொழிகள் எல்லா வற்றிற்கும் பொதுவாய் வழங்கிற்று. பின்பு
Teutonic
வகுப்புக்கு மட்டும் வழங்கத் தலைப்பட்டது. அதன் பின்பு இந்திய ஆரிய மொழியாகிய சமற்கிருதத்திற்கே
சிறப்பாய் வழங்கிற்று. இந்திய ஆரியர் நால் வகுப்பாராயினும், அவர்களுக்குள் பிராமணர் மட்டும்
இக் குறியீட்டைத் தமக்கும் தம் மொழிக்கும் வரையறுத்துக்கொண்டனர்.
ஆரிய வகுப்பு
மொழிகளுள்
Latin,
Greek என்ற இரண்டும்
முற்பட்டவை.
Teutonic
மொழிகள் அவற்றிற்குப் பிற்பட்டவை. ஐரோப்பிய
|