பக்கம் எண் :

32தென்சொற் கட்டுரைகள்

தம

    தமிழரும் இலைவடி வொப்புமைபற்றி அரசையும் பூவரசையும் ஓரின மாக்கினர். பூவையுடைய அரசு பூவரசு, அரசமரத்திற்குப் பூவின்மை யறிக.

    அரசன் என்னும் தென்சொல்லே ராஜன் என்று வடமொழியில் திரியும். அரசன் என்பதை ராஜன் என்னும் வடசொற்றிரிபாகத் தடுமாறக் கூறுவர் மொழிநூல் அறியாதார் சிலர். அரசு, பூவரசு என்னும் மரப்பெயர்கள் ஆரிய வருகைக்கு முன்பே தமிழ்நாட்டில் வழங்கிய பழந் தமிழ்ப்பெயர்கள் என்பதையேனும் அவர் அறிவாராக.

அரசன்

- ராஜன், Skt,

ராஜ் (இந்துஸ்தானி)

ராஜன்

- இராஜன்

- இராசன் (தற்பவம்)

ராஜ்யம்

- ராச்சியம்

- இராச்சியம்.

    ராஜன் என்னும் சொல்லினின்று rego, regent, region, regicide, regular முதலிய  ஆங்கிலச் சொற்கள் பிறக்கும்.

அரசன்

-அரைசன்,

அ-ஐ போலி.

அரைசன்

-அரைசன்,

 ச-ய போலி.

அரயன்

-ராயன் Skt.

roy; E. vice-Roy.

    ராயர் என்பது அரசரையும் ஒரு பார்ப்பனக் குடியையும் உணர்த்தும்.

    இராசகாரியம், இராச சின்னம், இராஜஸ்ரீ, இராசநீதி, இராசராசன், இராசவசீகரம், இராசவீதி, இராசாக்கினை, இராசாதிகாரம், இராசாதிபதி, இராசாத்தி, இராசாளி முதலிய தொடர்மொழிகளெல்லாம் அரசகாரியம், அரச சின்னம் முதலிய செந்தமிழ்த் தொடர்களின் திரிபுகளே யென்றறிந்து கொள்க.

        இராத்திரி, இராத்திரம்.

 இரா + திரி = இராத்திரி. இரா + திரம் = இராத்திரம். திரம் என்பது ஒரு விகுதிச் (suffix) சொல்.

        cf. சாயுந்திரம் - சாய்ந்திரம்.

        திரம் - திரி

        இரா - இருண்டிருப்பது. இருமை = கருமை, இரண்டு, இரவு என்னும் பெயர்கள் ரண்டு, ராவு என்று திரிந்தாற்போல, இராத்திரி, இராத்திரம் என்னும் பெயர்களும் ராத்ரி, ராத்ரம் என்று திரியும்.

        உசிதம் : உசிதம் =  உயர்வு, உகரச்சுட்டடியாய்ப் பிறந்தது.

        லட்சணம்: லக்ஷணம், லக்ஷ்யம் என்னும் வடசொற்கள் இலக்கணம், இலக்கியம் என்னும் தென்சொற்களின் திரிபென்பதை 'இலக்கியம் இலக்கணம்' என்ற கட்டுரையில் விரிவாகக் கூறியுள்ளேன். ஆண்டுக் காண்க.

        லட்சம். இலக்கம் - லக்ஷம்.