பக்கம் எண் :

34தென்சொற் கட்டுரைகள்

New Page 1

    'சின்னம் அல்லாக் காலை யான'

    'எண்ணிடை யிட்டுச் சின்னங் குன்றியும்'

    எனச் சின்னம் என்பது கலிப்பாவின் ஓருறுப்புப் பெயராகத் தொல்காப்பியத்துட் கூறப்பட்டிருப்பதால் தமிழ்ச் சொல்லாத லறியப்படும்.

    குடை, கொடி முதலியவை அரச அடையாளங்களாதலின் சின்ன மெனப்படும்.

    அரச சின்னங்களைப் பற்றிக் கூறும் செய்யுள் சின்னப்பூ. சின்னம்- sign (Eng) ஒருவரின் அடையாளமாகிய கையெழுத்து. sign - signal.

    தானம். தா + அனம் = தானம் - தாநம்.(வ)

    தா பகுதி, அனம் விகுதி.

    தா என்னும் தமிழ்ப்பகுதியே இலத்தீனில் do என்றும். இந்துத்தானியில் தேவ் என்றும் திரியும். தானம் - donum,Lat, donation, E.

    தேவதை. தேய் - (தேய்வு)-தேவன்.

    தேய்வு - (தேய்வம்) - தெய்வம். தேவு - தே.

    தேய்த்தல் = உரசுதல், கடைதல்.

    மூங்கில்கள் ஒன்றோடொன்று உரசுவதாலும், மக்கள் தீக்கடை கோலாற் கடைவதாலும் நெருப்புண்டாகும்.

    பொருள்கள் தேய்வதால் உண்டாவது தேயு.

    தேய் + உ = தேயு; தேயு - தே - தீ.

    தேய் - தே. தே + உ =  தேவு தேவு + அன் = தேவன். தீப்போல்வது தெய்வம்.

    தேவு - Theos.Gk Deus. L. Deity; E.

    தேவு-தேவம்-தேவதம்-தேவதை. தெய்வம்-தெய்வதம்.

    பரிபாகம். பரு-பரி, மிகுதிப் பொருளுணர்த்தும் உபசர்க்கம்.

பகு

+

அம்

பாகம், முதனிலை திரிந்து விகுதி பெற்ற தொழிற்பெயர்.

பகு

+

தி

பகுதி-பாதி.

பகு

+

அல்

=

பகல்-பால்.

பகு

+

பகை.

பகு

+

அம்

பக்கம் பகுதியிரட்டித்து விகுதி பெற்ற

பகு

+

அல்

பக்கல் } தொழிற்பெயர்.

பகு

+

பு

பகுப்பு.

பகு

-

வகு

 

 

பகு

-

பகிர்+ ஐ

வகை-அகை.