|
|
ஏகாரம் ஈகாரமாய்த்
திரிதலை, தேன் - தேம் - தீம் என்னும் திரிபிலும் கண்டுகொள்க. |
|
தேய் |
-
|
தேயு
(சமற்கிருதம்) |
=
|
நெருப்பு. |
|
இத் 'தேய்' அடியினின்றே
தெய்வப்பெயர் தோன்றிற்று. |
|
தேய் |
- |
தேய்வு |
- |
தேவு |
- |
தேவன், |
|
தேய்வு |
-
|
தெய்வு |
- |
தெய்வம். |
|
|
|
தேவு |
- |
தே |
= |
தெய்வம், தலைவன், |
"பால்வரை
தெய்வம் வினையே பூதம்"
(தொல். 541)
"தெய்வம் உணாவே
மாமரம் புட்பறை"
(தொல். 964).
"தெய்வம் அஞ்சல்
புரையறந் தெளிதல்"
(தொல். 1218)
"வழிபடு தெய்வம்
நிற்புறங் காப்ப"
(தொல். 1367).
யகரவொற்றுள்ள
தெய்வப் பெயரே பெரும்பான்மையாகவும்,
"தேவர்ப் பராஅய
முன்னிலைக் கண்ணே"
(தொல். 1395)
என வகரவொற்றுள்ள
பின்னை வடிவு அருகியும், இதுபோதுள்ள தமிழ்நூல்களுள் முந்தியதாகிய தொல்காப்பியத்துள் வருதல்
காண்க.