இன
இனி, சிலை என்பது சிலம்பு என்பது
போல் மலை என்றும் தமிழில் பொருள் கொண்டிருப்பதால், மலை என்னும் பொருளினின்றே கல்
(மலைப்பிஞ்சு) என்னும் முதலாகுபெயர்ப் பொருளும் தென்மொழியிலும், வடமொழியிலும் தோன்றிற்று
என்று கொள்ளவும் இடமுண்டு.
சிலை = மலை -
"வணங்காச் சிலைஅளித்த தோளான்" (பு.வெ.2:12)
சிலை = கல்
(பிங்க.)
ஆகவே, சிலை
என்னும் உருவப்பொருட் சொற்குத் தமிழ் மூலம் சற்று வலிந்து கொள்வதாகவே இருப்பினும்,
பின்வரும் ஏதுக்களால் அதைத் தென்சொல் என்று கொள்ளவும் இடமுண்டு.
|
1. |
வடமொழியில் சிலை என்னும்
சொற்கு மூலமில்லை. |
|
2. |
அம் மொழியில் அச்
சொற்குக் கற்பொருளேயன்றி உருவப் பொருளில்லை. |
|
|
தமிழில்இரண்டுமுண்டு. |
|
3. |
ஆரியர் இந்தியாவிற்கு
வருமுன்பே தமிழகத்தில் உருவக் கலை இருந்தது. |
|
4. |
வடமொழியில் குறைந்தபக்கம்
ஐந்திலிரு பகுதி தென்சொல். (என் 'வடமொழி வரலாறு' பார்க்க.) |
|
|
5. |
உருவம், படிமை என்னும்
தென்சொற்களும் வடசொல்லாகக் காட்டப்படுகின்றன. அவை
போன்றே சிலை என்பதும். |
|
|
6. |
வேத ஆரியர்க்கு வேள்வி
வழிபாடேயன்றி உருவ வணக்கமில்லை. தென்னாடு வந்தபின்னரே
தமிழரிடமிருந்து மேற்கொண்டனர். |
|
|
7. |
சிலா என்னும் வடசொல்லில்
இருமொழிப் பொதுவெழுத்தே யன்றி வடமொழிச் |
|
|
சிறப்பெழுத்தில்லை. |
|
8. |
தமிழ் ஐகாரவீறு
வடமொழியில் ஆகார ஈறாய்த் திரிவது இயல்பே. எ-டு: மாலை - மாலா; வடை-
வடா. |
|
|
9. |
சிலா என்னுஞ் சொல் இருக்கு
வேதத்திற்குப் பிற்பட்ட வடநூல்களிலேயே ஆளப்பட்டுள்ளது. |
|
|
10. |
சிலம்பு, சிலை என்னும் இரு
(மலைப்பொருட்) சொற்களும், தமிழில் சில் என்னும் ஒரே
மூலத்தையும்,
ஒலித்தல் என்னும் ஒரே வேர்ப்பொருட் கரணியத்தையும் கொண்டுள்ளன. |
|
|
|
11. |
தமிழ் மேலை ஆரியத்திற்கும்
அடிப்படைச் சொற்களை உதவிய பெருவளமொழி. |
|
- நாகைத்
தமிழ்ச்சங்க மறைமலையடிகள்
நினைவு மலர்
1969
|