கொண்டிருந்து.
இன்று மூடப் பழக்கவழக்கங்களையும் பொய்க்கதை
களையுங் கூறுந் தமிழை, மீண்டும் செய்யுள்
மொழியாயும், முத்தமிழ் மொழியாயும், செந்நெறி
மொழியாயும், மாற்றுவதால் பழந்தமிழ்
புதுக்கும் பாரதிதாசன் என்றேன்.
இவரைச் சிலர் புரட்சிப் பாவலர் என்பர்.
புரட்சி என்பது கீழ் மேலாய்ப் புரளுவ தாதலாலும்,
இடைக்காலத்திலிருந்து சீர்கெட்ட தமிழை
மீண்டும் தலைக்காலம் போலச் சீர்ப்படுத்துவது
நம் பாவலர் தொழிலா தலாலும், பழந்தமிழ்
புதுக்க லென்றாலும் புரட்சி என்றாலும் ஒன்றே
யென்க.
இவர் பலர்க்கும் ஏற்பப் பல பொருள்படுமாறு
தம் பெயரைப் பாரதிதாசன் என மாற்றிக்கொண்டதே
ஒரு புரட்சி என்க. பொதுமக்கட் குரிய அறிவு
விளக்க நூல்களைப் பிற்காலம்போல்
உரைநடையில் வரையாது முற்காலம்போற் செய்யுளிலே
வரைந்தது மற்றுமொரு புரட்சி யென்க. இவரைப்
பின்பற்றியே பொதுமக்கட்கு எளிய செய்யுள்
நடையில் நூல் யாத்த ஏனோருமுளர். ஆயினும், இவர்
என்றும் சிறந்தே நிற்பார் என்பதற்கு, எட்டுணையும்
ஐயமில்லை.
இப் புரட்சிப் புலவர் நீடு வாழ்ந்து நிலவுலகிற்கு,
சிறப்பாக, எம் தமிழ்நாட்டிற்கு, ஒரு பெரும்
காரிருள் நீக்கும் கதிரவனாக விளங்குமாறு எல்லாம்
வல்ல இறைவன் அருள் மீதூர்வாராக.
- "புரட்சிக் கவிஞர்" நூல் 1946 |