செந்தமிழ்ச்
சிவநெறியில், கடந்த மூவாயிரம் ஆண்டாகக்
கலந்துள்ள பயனற்ற சொற்களையும் கருத்துகளையும்
கதைகளையும் கொள்கை களையும் நீக்கித் தூய்தாக்கும்
துணிவும், உலகியலினின்றும் மதவி யலைப் பிரித்துணராமையும்,
இறைவழிபாட்டிற் செய்யுஞ் சீர்திருத்தங்
களும், உருவ வழிபாட்டிற்குச் சிறப்புக் கொடாமையும்,
"ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்" என்னும்
உரத்த நம்பிக்கையும், சமயப் பொது நோக்கும்,
எல்லா மொழிகளும் மக்கள் மொழிகளே என்னும்
மெய்யறி வும், அடிகளின் செம்பொருட் காட்சியாம்.
சான்றாண்மை
சான்றாண்மைக்கு உறுப்பாகிய அன்பு, நாண், ஒப்புரவு,
கண் ணோட்டம், வாய்மை என்னும் ஐந்தும் அடிகளிடம்
அமைந்துள்ளன.
பண்புடைமை
இரப்போன் முதற் புரப்போன் வரை அவரவர்
மனப்பான்மையும் தகுதியும் அறிந்து, அதற்கேற்ப
ஒழுகுதல் பண்புடைமையாகும்.
பண்பெனப்
படுவது பாடறிந் தொழுகல்
(கலித்.
133)
என்றார்
நல்லந்துவனார்.
நன்றாற்ற
லுள்ளுந் தவறுண் டவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை;
(குறள்.
469)
என்றார்
தெய்வப் புலமைத் திருவள்ளுவர்.
வள்ளன்மை
அடிகளின் வள்ளன்மைக்கு அவர்களின் உறுதுணையாற்
கல்வி பயின்றவர்கள் வெளியிடும் இச் சிறப்பு
மலரே போதிய சான்றாம்.
கடைக்கழகக் காலத்தில் வாழ்ந்ததனாற்
கடையெழு வள்ளல்கள் எனப் பெயர் பெற்றவருள்
தலைசிறந்த பாரியின் வள்ளன்மையை, இக்காலத்தார்க்கு
எடுத்துக்காட்டும் முகமாக, அடிகள் ஆண்டுதோறும்
பறம்பு மலையில் சிறப்பாக நடாத்தி வரும் பாரி
கொடைவிழா, சிறு பிள்ளைகளும் கண்ணாரக் கண்டு
வியக்கத்தக்க வள்ளன்மைச் செயலாம்.
அடக்கமுடைமை
யானை, ஒட்டகம் முன்செல்ல, தாரையூதிப் பல்லியங்
கறங்க, இருபுறத்தும் வெண்கவரி வீச, குடை கொடி
முதலிய விருதுகளுடன் சிவிகையேறி ஆரவாரமாகச்
செல்லாதும், அக்கமாலையை அளவிற்கு மிஞ்சி
அணியாதும்,
"மனத்துக்கண்
மாசில னாதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற"
(குறள்.
34) |