பக்கம் எண் :

20பாவாணர் நோக்கில் பெருமக்கள

தமிழெழுத்து மாற்றம் தன்மானத் தந்தையார் கொள்கையா?

ஆரியச் சூழ்ச்சியால் அடிமைப்பட்டு ஆயிரக்கணக்கான ஆண்டு கள் அலமந்துழலும், அருமொழித் தமிழரை விடுவித்து முன்னேற்ற முயன்ற முனைவர் மூவருள் இறுதியரான, பெரியாரின் நூற்றாண்டு விழாவென்று விளம்பிய மட்டில், ஏற்கெனவே இருந்த இடம் தெரியாமல் இருந்தவரும், பெரியாரொடு ஒருமுறையேனும் பேசியறியாதவரும், தன் மான வுணர்வும் தமிழ்ப் புலமையும் தக்கவாறில்லாதவரும், தன்மானப் போர்ப் படைத்தலைவர் போன்றும், தன்னேரில்லாத் தமிழதிகாரி போன்றும், நடித்துக்கொண்டு, தமிழ் உலகப் பொதுமொழியாகவும் தமிழின் ஒன்றிய நாட்டினங்களின் தலைவனாகவும் ஒரே வழி "விடுதலை" யெழுத்தை மேற்கொள்வதே என்று மேடைகளிற் பிதற்றியும், ஓரளவு அதிகாரம் பெற்றுக் குழுக்கள் அமைத்தும் கூட்டங்கள் கூட்டி யும், தமிழ்ப் பகைவரும் தமிழறியாத பெருமாளரும் கற்றுக்குட்டிகளு மான தகுதியில்லா மக்களின் கருத்தைத் துணைக்கொண்டும், தம்வயப் பட்ட ஏடுகளிலெல்லாம் தமிழெழுத்தை மாற்றி, உலகில் இதுவரை எவ ரும் நிலைநாட்டாத தொன்றை நிலைநாட்டி விட்டதாகக் கொட்ட மடித்துத் திரிவாராயினர்.

அரசகோபாலாச்சாரியார் 1937-ல் தமிழ்நாட்டில் கட்டாய இந்திக் கல்வியைப் புகுத்தியதிலிருந்து, நான் இந்தியெதிர்ப்புப்பற்றிப் பெரியா ருடன் தொடர்புகொண்டு இறுதிவரை நெருங்கிப் பழகினேன். அக் காலமெல்லாம், தமிழர் "விடுதலை" யெழுத்தை மேற்கொள்ள வேண்டு மென்று, பெரியார் ஒரு கூட்டத்திலேனுஞ் சொன்னதுமில்லை; ஓர் இதழிலேனும் எழுதினதுமில்லை. எனக்கு முன்பே பெரியாரை யடுத்து அவர் தன்மானக் கொள்கையைக் கடைப்பிடித்து அவருக்கு வலக்கை போல் துணையா யிருந்துவந்த பர். (Dr.) கி.ஆ.பெ. விசுவநாதம் என்னும் உலக நம்பியாரும், இதற்குச் சான்று பகர்வர்.

நான் திருச்சிராப்பள்ளியிற் பணியாற்றிய காலத்தில், 1938ஆம் ஆண்டில் பெரியார் ஈரோட்டிலிருந்து எனக் கெழுதியிருந்த 5 பக்கக் கடிதம் மரபெழுத்திலேயே எழுதப்பட்டிருந்தது. நான் சேலம் நகராட்சிக் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவனாயிருந்த காலத்தில், 1947ஆம் ஆண்டில்,