பக்கம் எண் :

22பாவாணர் நோக்கில் பெருமக்கள

2. தீண்டாமை விலக்கு

வைக்கம் வீரர்" என்னும் விருதுப் பெயரே இதை விளக்கப் போதுமானது.

3. தன்மானங் காத்தல்

தமிழன் தன்னைச் "சூத்திரன்" என்று சொல்லவும் பிராமணன் சொல்லவிடவும் பிராமணனைச் "சாமி" என்று விளிக்கவும், மரக்கறி யூண் வெள்ளாளன் வீட்டிலும் உண்ணாத பிராமணன் உண்டிச் சாலையில் உண்ணவும், கூடாதென்று தடுத்தது தன்மானங் காத்தலாகும்.

எனக்குத் தெரிந்தவரை பிராமணர் வீட்டிலும் உண்டிச் சாலை யிலும் எந் நிலைமையிலும் உண்ணாமையைக் கடைப்பிடித்து வரும் உண்மைத் தன்மானியர், தகடூர்த் (தர்மபுரித்) தமிழ மருத்துவர் அ. செல்லையா ஒருவரே.

4. மடமை யகற்றல்

நாளும் புள்ளும் பற்றிய மூடநம்பிக்கை விடுகை, வீண்சடங் கொழிப்பு, திருமணச் சீர்திருத்தம், உருவ வழிபாடு - சிறப்பாக யானை முகப் பிள்ளையார் வணக்க விலக்கு, தொன்மக் (புராணக்) கதைகளை நம்பாமை, இழிவான கட்டுக்கதை பற்றிய விளக்கணி (தீபாவளி)ப் பண்டிகையைக் கொண்டாடாமை முதலியன பற்றிய விளக்கச் சொற்பொழிவுகளும் கட்டுரைகளும் மடமை யகற்றலாகும்.

5. அஞ்சாத் தொண்டு

சிறைத்தண்டனை யடைந்ததும் கட்டாய இந்தியை யெதிர்த்ததும், கல்லெறியுஞ் சாணியெறியும் பட்டும் தொண்டுவிடாமையும் பெரு வாரியான பல்வேறு வகுப்பார் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமையும், அஞ்சாத் தொண்டாம்.

6. கடைப்பிடி

சிறுநீர் நோய்க்கு அறுவை மருத்துவம் செய்துகொண்டும், நாள்தொறும் இடர்ப்பட்டும், கழிபெரு மூப்புத் தளர்ச்சியுற்றும், இடைவிடாது இறுதிவரை தொண்டிற் படிந்தது கடைப்பிடியாம்.

7. தன்னலமின்மை

தனக்கென்று பொருளீட்டாது பொதுநலத் தொண்டிற்கென்று தொகுத்தது தன்னலமின்மை.

8. பண்புடைமை

மறைமலையடிகள் போலும் அறிஞரை மதித்ததும், பொறுப்பு வாய்ந்த புலவர் ஒருவர் "நாய்க்கர்" என்னும் குலப்பெயரை இருபிறப்பி (hybrid) யாக்கித் தம்மைப் பழித்தபோது திருப்பிப் பழியாது நாகரிகமாய்க்