தென்றும்
அ இ உ என்னும் தமிழ் முச்சுட்டே ஆரிய
மொழிகளிலுள்ள சுட்டுச் சொற்கட்கெல்லாம்
மூலமென்றும், திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
யாழ்ப்பாண
ஞானப்பிரகாச அடிகள்,
1938-ல் தாம் வெளியிட்ட சொற்பிறப்பு- ஒப்பியல்
தமிழ் அகராதி முகவுரையில், But
It was only some ten years ago that the present writer had the good
fortune of stumbling on the fact that DR and I E words were actually
derived from the same primitive roots, என்று
கூறியுள்ளார்.
இந்திய
வரலாற்றுத் தந்தையான வின்சென்று
சிமிது
(Vinsent
Smith),
தம் "முந்திய இந்தியா"
(Early
India)
என்னும் வரலாற்று நூலில், மனோன்மணிய ஆசிரியர்
சுந்தரம் பிள்ளை கருத்தை முற்றும் ஒப்புக் கொண்டு, இந்திய வரலாற்றைத்
தெற்கினின்றே தொடங்க வேண்டுமென்று நெறியிட்டுச்
சென்றார். அதைத் தழுவியே,பி.தி.
சீனிவாசையங்கார் "இந்தியக்
கற்காலம்" , "ஆரிய
முன்னைத் தமிழப் பண்பாடு"(Pre-Aryan
Tamil Culture), "தமிழர்
வரலாறு" (History
of the Tamils)
முதலிய நூல்களும்,வி.ஆர்.
இராமச் சந்திர தீட்சிதர்
"தமிழர் தோற்றமும் பரவலும்(Origin
and Spread of the Tamils), "வரலாற்று
முன்னைத் தென்னிந்தியா"(Pre-Historic
South India)
என்ற
நூல்களும் வெற்றிபெற எழுதிப் போந்தனர்.
கால்டுவெலார்க்குப் பிற்பட்ட மேலை மொழிநூலாரெல்லாம்,
பேரனைப் பாட்டனாகப் பிறழவுணர்ந்து வரலாறு
தீட்டுவார் போல், சமற்கிருதத்தை அடிப்படையாகக்
கொண்டு மொழியாராய்ச்சி செய்த தனால், முட்டுப்பட்டு
மதிமருண்டு, "எல்லாச் சொல்லும்
பொருள்குறித் தனவே," என்னும் (தொல். பெயர்.1)
தமிழ் நெறிமுறைக்கு நேர்மாறாக, "எல்லா
மொழியும் இடுகுறித் தொகுதியே," என்று தம் இரு
கண்ணையும் இறுகக் கட்டிக்கொண்டு, ஓர் உயிரியின்
தலையும் வாலும் நீக்கி முண்டத்தை மட்டும்
வரைந்தாற்போன்று, முன்பின் வரலாற்றை முற்றும்
புறக்கணித்து மொழிகளின் இற்றை நிலையை மட்டும்
எடுத்துக் கூறும் "வண்ணனை மொழி நூலை"(Descriptive
Linguistics)வளர்த்து,
மாணவரையும் ஆசிரியரையும் மயக்கி வருகின்றனர்.
வண்ணனை, ஒப்பியல், வரலாறு ஆகிய மூவியல்களையும் ஒருங்கே
கொண்டதே மொழிநூல்.
"வண்ணனை மொழிநூல்" இலக்கண நூலின் ஒரு கூறேயன்றி,
மொழி நூலோ முழு நூலோ அன்று. அவர் கூறும் வரலாற்று
மொழிநூல் இலக்கியத்தை அடிப்படையாகக்கொண்டதேயன்றி,
மொழியை அடிப் படையாகக் கொண்டதன்று.
மொழி இலக்கியத்திற்கு முந்தியது. இலக்கியத்திற்கும்
பிந்தியது இலக்கணம். வெள்ளையர் கூறுவதெல்லாம்
விழுமிய அறிவியலன்று. |