ஒருவர் ஓர் உயர்பதவி யடைந்துவிட்டதனால் திடுமென்று
ஒரு பெரும் புத்தறிவு தோன்றிவிடாது. (இவ்விடத்தில்,
அண்மையில் மதுரைப் பல்கலைக்கழகத் துணைக்கண்காணகர்
(Vice-Chancellor)
பதவியில் அமர்த்தம் பெற்ற பர்.வா.செ. குழந்தைசாமி
அவர்கள், ஆங்கிலத்தில் உள்ள அறிவியல்
சொற்களை அப்படியே தமிழில் பயன்படுத்த வேண்
டும், என்னும் போலிக் கருத்தை வெளிப்படுத்தித்
தமிழ் மாணவர் களைக் குழப்பத்தில் ஆழ்த்திய
செய்தியைப் பொருத்திப் பார்க்க.) எக்
கருமத்திற்கும் எத் தொண்டிற்கும் அதற்குரிய
தகுதிகள் வேண்டும். தமிழ்த் தொண்டிற்குத்
தமிழ்ப்புலமை, தமிழா ராய்ச்சி தமிழ்ப்பற்று
ஆகிய மூன்றும் இன்றியமையாதன .
ஓர் அறிவியல் துறையிற் பயிற்சி பெற்றவர்
தமிழ்த் துறைக்குத் தகுதியுள்ள வராகார். பயிற்சித்துறை
மாற்றிப் பணியமர்த்துவது, உழவனைத் தச்சு வேலைக்கும்,
தச்சனை நெசவுத் தொழிலுக்கும் அமர்த்துவது
போன்றதே.
தமிழைத் தாய்மொழியாகக் கொண்டமட்டில்,
ஒருவர் தமிழ்ப் பற்றாளராகார் .
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகர முதலி யைச்
சீர்கெடுத்து, வளர்தமிழைத் தளரச் செய்த வையாபுரியாரும்
ஒரு தமிழரே.
சமற்கிருத வெறியர்க்கும் பேராயக் கட்சியார்க்கும்
பெரியாரைப் பின்பற்றுவோருட் பலருக்கும், தமிழ்ப்பற்றிருத்தல்
இயலாது. தமிழ் ஒரு காட்டுவிலங்காண்டி மொழி (காட்டுமிராண்டிப்
பாஷை) என்று பெரியார் சொன்னதை மறந்துவிடக்
கூடாது.
"ஓங்க
லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும்-ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
தன்னே ரிலாத தமிழ்"
இத் தன்னேரிலாத தமிழின் இரு சிறப்பியல்புகள்
மென்மையும் தூய்மையும்-இவ்விரண்டும் நீங்கிவிடின்,
தமிழ் தமிழாகாது, மலையாளம் போல ஒரு கொடுங்கலவைத்
திரவிட மொழியாக மாறிவிடும். அதன்பின் தமிழைப்பற்றிப்
பெருமை பாராட்ட இம்மியும் இடமிராது. இந் நிலை
மையே தமிழ்ப் பகைவர் நீண்ட காலமாக எதிர்பார்ப்பது.
ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தனியியல்புண்டு. அது
அதன் ஒலித் தொகுதியையும் சொல்லமைதியையும்
பொறுத்தது. தமிழிலுள்ள முப்பதொலிகளே அதன்
இயல்பிற்கேற்கும், அயலொலிகள் சேரின் அதன்
இயல்பு கெடும். உலகில் தமிழ் ஒன்றே மெல்லோசை
மொழி. பிறவெல்லாம் வல்லோசை மொழிகள். நொய்ய
மெல்லாடையொடு திண்ணிய வல்லாடையை இணைத்தால்,
அவ் விணைப்பைத் தாங்காது மெல்லாடை
கிழியும். அங்ஙனமே வல்லோசைப் பிற
மொழிச் சொற்கள் சேரின், மெல்லோசைத்
தமிழ் கெடும். வல்லியன் மேனியுள்ள ஆடவரை நோக்க, |