தீர்ப்பாளர் மகராசனார் திருவள்ளுவர்
தமிழ் நாட்டரசுச் சட்டவியற் குறியீடுகள்
மொழிபெயர்ப்புக் குழுத் தலைவர் ஓய்வு பெற்ற
சென்னை உயர்மன்ற நடுத்தீர்ப்பாளர் திரு.
மகராசனார்
எழுதி,
புதுத்தில்லி இலக்கிய மன்றம் (Sahitya
Akademi)
வெளியிட்ட, "திருவள்ளுவர்" (Tiruvalluvar)
என்னும் ஆங்கிலச் சின் னூலைப் பார்வையிட்டேன்.
அதன் அட்டை முகத்திலுள்ள ஒரு முனிவர் உருவப்படம்
முதற்கண் என் கண்ணைக் கவர்ந்தது. அது திருவள்ளுவர்
உருவப்படம் என்று கண்டேன். இதற்கு முன் பத்திற்குக்
குறையாத திருவள்ளுவர் உருவப் படங்கள் வெளிவந்தும்,
புலவர் தெய்வநாயகம் தம் "திருவள்ளு வர் கிறித்தவரா?"
என்னும் பொத்தக அட்டை முகத்திற்
பொறிப்பித்தது ஒன்று தவிர, ஏனையவெல்லாம்
திருவள்ளுவர் இனப்பான்மைக்கோ மனப்பான்மைக்கோ
சற்றும் பொருந்தாமலே யிருந்தன. இன்று, மகராசனார்
சுவடிப் படம் புலவர் தெய்வநாயகம் வகுத்ததினுஞ்
சற்றுத் திருந்தியிருத்தல் கண்டு, கழிமகிழ்கொண்டு
ஒரு கவலையும் விண்டேன்.
இனி, சுவடிப் புறத்துள்ள வரையோவியம்
போன்றே அகத்துள்ள உரையோவியமும் திருந்தியிருக்குமோ
என்னும் ஐயமும், ஒருசில பக்கங்களைப்
புரட்டியவுடன் அறவே அகன்றது.
திருக்குறட்கு, இதுவரை எத்தனையோ உரைகள் தமிழிலும்
பல அயன்மொழிகளிலும் வெளிவந்துள்ளன. எனினும்,
இன்னும் எவரும் அந் நூலின் நயங்களையெல்லாம்
சொல்லி அல்லது கண்டு தீர்ந்தபாடில்லை. "நவில்தொறும்
நூனயம் போலும்" என்ற திருவள்ளுவர் திருவாய்
மலர்விற்கு, அவர் நூலே எடுத்துக்காட்டா
யிருந்துவருகின்றது.
இந் நூற்றாண்டுத் தொடக்கத்தில், பாலவநத்தம்
வேள் பாண்டித்
துரைத் தேவர்
அரும்பாடுபட்டுத் தொகுத்து வைத்திருந்த, ஆயிரக்
கணக்கான அரிய பண்டைத் தமிழ் ஏட்டுச்
சுவடிகள், அவர் நிறுவிய மதுரைத் தமிழ்ச் சங்கப்
பொத்தகக் களஞ்சியத்தில், யார் சூழ்ச்சியாலோ,
ஒருநாள் திடுமென்று எரியுண்டு சாம்பராயின. அவ்
வேட்டுத் தொகுதி யுள், இதுவரை அச்சேறாத பத்துத்
திருக்குறளுரையும் இருந்ததாகச் சொல்லப்படுகின்றது.
அவற்றிற்கு முன்னும் இயற்கையாகவும் செயற்கை
யாகவும் அழியுண்ட |