திருந்தனர்.
அவருக்கும் பிறருக்கும் பெருந்தலைவராய்ப் பிறங்கித்
தோன்றிய பேராசிரியர் இருவரே. அவர் மறைமலையடிகளும்
நாவலர் சோ.சு.பாரதியாரு மாவர்.
இவ் இருவராலேயே இந்தியெதிர்ப் பியக்கம் வன்மை
பெற்று வெற்றி கண்டது எனின் மிகையாகாது.
நாவலர் பாரதியார் கட்டாய இந்தி வெறுப்பினால்,
"காங்கிரசு" என்னும் பேராயக் கட்சியினின்று விலகி,
நாடு நகரெங்கும் சுற்றி, எண்ணிறந்த இந்தியெதிர்ப்புக்
கூட்டங்களிலும் மாநாடுகளிலும் தலைமை தாங்கித் தமிழ்
முழக்கஞ் செய்து, கட்டாய இந்தியின் முதுகந்தண்டை
முறித்தார். அதன் பயனாகவே, ஆங்கிலேயர் மீண்டும்
அதிகாரத்தைப் பெற்ற இடைக்கால ஆட்சியில், கட்டாய
இந்தி கதுமென விலக்கப் பட்டது.
எடுப்பான வளர்த்தியும், ஏக்கழுத்தும், எழில்முகமும்,
வீறுபெற்ற மீசையும், ஏறு நச்சும் பீடுநடையும், மறலியும்
அஞ்சும் தறுகட் பார்வை யும் உடைய நாவலர் பாரதியார்,
இடியோசை கேட்ட நாகம்போல் எதிரிகள் நடுங்கி
யொடுங்குமாறு, குமுறிய இந்தியெதிர்ப்பு மறமுழக்கம்,
கண்டார் கேட்டார் அகக்கண் முன்பும் அகச்செவியிலும்
இன்னும் தொலைக்காட்சியும் தொலைபேசியும்
போல், தோன்றிக்கொண்டும் ஒலித்துக் கொண்டும்
இருக்கத்தான் செய்கின்றன. 2. இலக்கியத் தொண்டு
உரையாசிரியருள் நுண்மாண் நுழைபுல முடையாரும் மண்மாண்
புனைபாவையாகி மயங்குமாறு, உயரிய இலக்கணமான ஒல்காப்
பெருமைத் தொல்காப்பியத்தின் மூவியல்கட்கு முன்னரே
உரைகண்ட உளம் பூரணரான இளம்பூரணரும் உச்சிமேற்
புலவர்கொள் நச்சினார்க்கி னியரும், கூராசிரியரான
பேராசிரியரும், பிறரும் காணமுடியாத காழுரையை நம் நாவலர்
பாரதியார் கண்டார். அவ் வுரைக்கு ஓரரிசிப் பதமாக
உள்ள ஓர் எடுத்துக் காட்டு வருமாறு:
"கொடிநிலை கந்தழி வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு
கண்ணிய வருமே"
(33)
என்பது
ஒரு தொல்காப்பியப் புறத்திணையியல் நூற்பா.
இதில், குறிக்கப்பெற்ற கொடிநிலை, கந்தழி,
வள்ளி என்னும் புறத் துறைகட்கு, புறப்பொருள் வெண்பா
மாலை ஆசிரியராகிய ஐயனாரிதனார் பின்வருமாறு
பொருள் கொண்டார்.
கொடிநிலை
"மூவர்
கொடியுளும் ஒன்றொடு பொரீஇ
மேவரு மன்னவன் கொடிபுகழ்ந் தன்று" |