' திருவள்ளுவரும் பிராமணியமும்' - மதிப்புரை
தமிழே உலக முதல் உயர்தனிச் செம்மொழியாயும்
திரவிடத் திற்குத் தாயும் ஆரியத்திற்கு
மூலமுமாயும், தமிழரே உலகெங்கும் ஒளி பரவுமாறு முதல்
முதல் நாகரிகப் பண்பாட்டு விளக்கேற்றினவ
ராயும், இருந்தும்; இற்றைக்கு 2500 ஆண்டுகட்குமுன்
நாவலந்தேயத்திற் குள்ளும் 2000 ஆண்டுகட்கு முன்
தென்னாட்டிற்குள்ளும் வந்து புகுந்த பிராமணர்
என்னும் ஆரியப் பூசாரியர், தாமுந் தம் எச்சமரபும்
பழங்குடி மக்களான தமிழரையும் திரவிடரையும்
என்றும் அடிமைத் தனத்துள்ளும் அறியாமையுள்ளும்
அமிழ்த்தி மேனத்தாக வாழுமாறு, தம் வெண்ணிறத்தையும்
தம் முன்னோர் மொழியின் எடுப்பொலியையும்
பயன்படுத்தித் தம்மை நிலத்தேவராகவும் தம்
வழக்கற்ற முன்னோர் மொழியைத் தேவமொழியாகவும்
காட்டி, தமிழ நாகரிகத்தின் தனிப் பெருஞ்
சான்றாயிருந்த பல்லாயிரக்கணக்கான முதலிரு
கழக நூல்கள் அத்தனையையும் அழித்துவிட்டனர்.
இன்று தமிழ் நாகரிகத்தின் தனிச் சிறப்பைத்
தாங்கி நிற்கும் இருபெருந் தூண்கள், இடைக்கழகத்திற்கும்
கடைக்கழகத்திற்கும் இடையிலெழுந்த தொல்காப்பியம
என்னும் இலக்கண நூலும் திருக்குறள
என்னும் இலக்கிய நூலுமே. இவ்விரண்ட னுள்,
பொதுமக்களும் புலமக்களுமான இருசாரார்க்கும்
விளங்குவதும், மன்பதை முழுவதற்கும் உலகுள்ள
வளவும் பயன்படுவதும், இன்றும் எம்மொழியிலும்
இணையில்லாததும் திருக்குறளாகும். இவ்விரு நூல்
களையும், தமிழ்நாட்டையே தாய்நாடாகவும் தமிழையே
தாய்மொழி யாகவும் கொண்டு தமிழாலேயே
பெரும்பாலும் வாழ்ந்து வரும் பிராமண ருட் சிலர்,
நூலாசிரியரும் நுவலாசிரியரும் உரையாசிரியரும்
பதிப்பாசிரிய ரும் தாளாசிரியருமாயிருந்து ஆரிய
வழியினவாகக் காட்டிக், கட்டுப்பாடா
கவும் நன்றிகெட்ட தனமாகவும் தம் முன்னோர்
ஏமாற்றை இன்றும் போற்றி வருகின்றனர். நூலாசிரியருட்
சிறப்பாகக் குறிப்பிடற் குரியவர் வரலாற்றாசிரியர்.
முன்பு காளிக்கோட்டப் பல்கலைக்கழக வரலாற்றுத்
துறை வாசகராகவும், பின்பு சென்னைப் பல்கலைக்கழக
இந்திய வரலாற்றுப் பழம்பொருட்கலைப் பேராசிரியராகவும்,
இருந்த (S)
கிருட்டிணசாமி ஐயங்காரால் 1920-ல் ஆங்கிலத்தில்
எழுதப்பட்ட "இந்தியக் கலை நாகரிகத்திற்குத்
தென்னிந்தியா உதவிய சில கூறுகள்" (Some
Contributions |