துவக்கமாம்
வசையற்ற வெட்சியின் "மறங்கடைக் கூட்டிய" சிறப்பு
வகை மூன்றை முதலாகக் கொண்டு வரும் பாடாண் பகுதி
மூன்றும்; கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வரும் - கடவுட்
பரவுதலுடன் பொருந்தி வரும்.
"குறிப்பு: ஈற்றேகாரம் அசை. பொதுவாகப் பாராட்டு நுவலும் பாடாணின் சிறப்பு வகை மூன்று, கடவுள் வாழ்த்தைத் தழுவி வருதல் குறிக்கக் கடவுள் வாழ்த்துக்கு "ஒடு"க் கொடுத்துரைக்கப்பட்டது. போரைத் தொடங்குந் திணை வெட்சி; அதன் பொதுவாக ஆகோள்; சிறப்பு வகைகளுள் பாடாணாய்க் கடவுள் வாழ்த்துக் கண்ணுவன இதிற் குறித்த மூன்றுமேயாதலின், முற்றும்மை கூட்டப்பட்டது. இதிற் குறித்த மூன்றும் தம்மளவில் வெட்சி வகைகள். அவற்றை முதலாகக் கொண்டு வரும் பாடாண் பகுதி மூன்றே கடவுள் வாழ்த்தொடு வருமெனற்கு, "முதலன மூன்றும்" என்று கூறப்பட்டது. "அகர முதல எழுத்தெல்லாம்" என்றது போல, கடவுள் கண்ணிய பாடாண் வகை இதிற் குறித்த "மூன்று முதலன" எனக் கொள்க. "முதலன" ஈண்டுக் குறிப்பு வினை; "முதலாக வுடைய" என விரியும்.
இனி, நம் நாவலர் புத்துரை பெற்ற இலக்கணத் துறைகளும்
குறியீடுகளும் தனிச் செய்யுள்களும் பலப்பல. இவராற்
பாடப்பெற்ற சில செய்யுள்களுமுள. இவர் எழுதிய சேரர்
தாயமுறையும் தொல் காப்பியப் புத்துரையும்,
இவருடைய இலக்கண விலக்கியக் கல்விப் பரப்பையும்,
கூர்த்த மதியையும், நுணுகிய நோக்கையும், ஆராய்ச்சி
யாற்றலையும், ஒருங்கே புலப்படுத்தும்.
இனி, இவர் குலவொழிப்பு மாநாடுகளிற் கலந்துகொண்டதும்
பெரியாருக்கிட்ட சிறைத் தண்டனையைக் கண்டித்ததும்,
குடிசெயல் வகைத் தொண்டின் பாற்படும்.
இத்தகைய தமிழ்ப் பெரியார் நலமும் வலமும் நிரம்பப்
பெற்று நீடு வாழ்க!
- "தென்றல்"
8.8.1959
|