சொன்னால் அது வழங்க வேண்டும்.
மக்கள் ஒரு கூட்டத்தார் அதைக் கல்லாமலேயே
இயல்பாக அதைப் பேசிவரவேண்டும். அப்படி எவன்
பேசுகிறான்? சும்மா, ஏதோ காட்டு மடத்திலே
ஓட்டாண்டிகள் கூடினது போல, சமசுக்கிருதப்
பண்டிதர்கள் சிலர் சேர்ந்து அதைப் பேசி
வருவதால் அது உயிருள்ள மொழியாகப் போய்விடுமா?
அதுவும் உயிருள்ள மொழி யென்றால். எல்லா
மொழிகளும், உலகத்தில் வழக் கற்றுப் போன
மொழிக ளெல்லாம்கூட இப்பொழுது பேசப்படத்தான்
செய்கின்றன. இலத்தீன் பேசுகிறார்கள்; கிரீக்கு
பேசுகிறார்கள். எசுப்ப ரெண்டோ, நோயல்,
வலப்புக்கு என்ற செயற்கை மொழிகளையெல்லாம்
இப்பொழுது பேசுகிறவர்களும் இருக்கிறார்கள்.
ஆகையினால் நாள்தொறும் வாய்தொறும்
பேசுவதினாலே ஒருமொழி உயிருள்ள மொழி என்று
ஆகிவிடாது.
சமசுக்கிருதம் ஒரு பாவை (பொம்மை)
போன்றது. கடை யிலே இருக்கிறதன்றோ பாவை; அஃது
என்றைக்காகிலும் பிறந் ததா? என்றைக்காகிலும்
இறந்ததா? அது போன்றது இந்தச் சமசுக் கிருதம்.
அதை வைத்துக்கொண்டு இவ்வளவு பெருமை பண்ணுகிறார்
கள். எதனாலென்றால் அந்த அளவுக்கு நாம்
அடிமையாகப் போன தனால்தான். இந்த
முயற்சிகளையெல்லாம் நாம் தடுத்தே ஆக வேண்டும்.
தமிழைக் கெடுப்பதற்கென்றே இந்தச்
சமசுக்கிருதம் தோற்று விக்கப்பெற்றது. என்னுடைய
தமிழர் மதம் என்னும் நூலிலேகூட அது
வழிபாட்டிற்குத் தகாதமொழி என்று நான்
சொல்லியிருக்கின்றேன்.
நாம் என்ன செய்ய வேண்டும் என்றால்,
சொல்கிறேன். சமசுக்கிருத்திற்கும் தமிழுக்கும்
ஆயிரக்கணக்கான சொற்கள் பொதுவாக இருக்கின்றன.
அவர்கள் தமிழிலிருந்து அத்தனைச் சொற்களையும்
கடன் கொண்டுவிட்டு, இப்பொழுது கடன்
கொடுத்தவனையே கடனாளி என்கிறார்கள்.
இதற்கெல்லாம் நம் ஏமாளித்தனந்தான் கரணியம்.
இப்பொழுது நாம் சில அடிப்படைச் சொற்களை
எடுத்துக் கொள்வோம், காலம், உலகம் போல.
தொல்காப்பியத்திலே ஒரு நூற்பா வருகிறது,
கிளவியாக்கத்திலே!
காலம் உலகம் உயிரே உடம்பே
பால்வரை தெய்வம் வினையே பூதம்
ஞாயிறு திங்கள் சொல்லென வரூஉம்
ஆயீ ரைந்தொடு பிறவும் அன்ன
ஆவயின் வரூஉங் கிளவி யெல்லாம்
பால்பிரிந் திசையா உயர்திணை மேன.
என்பது அது. இந்த நூற்பாவின்
தொடக்கத்தில் வரும் காலம், உலகம் இரண்டும் தூய
தமிழ்ச் சொற்கள். உலகம் என்ற சொல்லை
எடுத்துக் கொள்ளுங்கள். உலவுதல் என்றால் வளைதல்
என்று பொருள். உலாப் போதல் என்று
சொல்லப்படுவதில்லையா? அரசன் ஊரை வலமாக
வளைந்து வருவதைத்தான் உலாப் போதல் என்பது.
உல-என்றால் உருட்சி
|