8
வ.சு. பவளவிழா உரை
எனது பாராட்டு, விழாத் தலைவருக்குத்
தேவையே இல்லை. சமயம் கிடைக்கும் போதெல்லாம்
என்னுடைய சொற்பொழிவுகளிலும், நூல்களிலும்
அவரைப் பாராட்டியே வந்திருக்கின்றேன்.
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் புத்தகம்
வெளியிடும் கழகம் மட்டுமன்று. அது
தமிழகத்திலேயே-உலகிலேயே- நூல்கள் வெளியிடும்
ஒரு மாபெரும் அமைப்பு நிலையம். சிறு விற்பனை
நிலையமாகத் தொடங்கப்பட்ட இது ஒரு பெரிய
பல்கலைக்கழகம் போல் விரிவடைந்துள்ளது. இவை
யெல்லாம் திரு. வ. சுப்பையா பிள்ளை அவர்களுடைய
மூளையின் வேலைதான். வேறு யாராவது அவருடைய
இடத்தில் இருந்திருந்தால் கழகம் இவ்வளவு
விரிவடைந்திருக்காது. இஃது இறைவனுடைய ஏற்பாடு
என்று நான் கருதுகிறேன்.
திரு. சுப்பையா பிள்ளை அவர்கள் ஒரு
புத்தக வணிகர் மட்டுமல்லர். அவர் ஒரு
செந்தமிழ்க் காவலர், புலவர், புரவலர், பல்துறை
அறிவு பரப்புநர், இந்நாட்டு முன்னேற்றத்
தொண்டர்களுள் ஒருவர். இப்படிப் பல்துறையில்
அவரைப் பார்க்க வேண்டும்.
தேர்வு எழுதுகிறவர்கள் தேர்வுக்கு
வேண்டிய எல்லாப் புத்தகங் களையும் ஒரே
சமயத்தில் கழகத்தில் வாங்கிவிடலாம். புத்தக
அமைப்பை எடுத்துக்கொண்டால் அத்துறையில்
அவர்கள் வாகை பெற்றவர்கள் என்று தான் சொல்ல
வேண்டும். ஒரு செல்வர் சைவ சித்தாந்த
நூற்பதிப்புக் கழகத்திற்குச் சென்று
பார்ப்பாரானால் அந்தப் புத்தகத் தொகுதிகள்
முழுமையும் அப்படியே வாங்கிக்கொள்வார்.
(அப்படிப்பட்டவர்கள் இப்பொழுது இல்லை. வீடும்
நிலமும்தான் வாங்குவர்)
மனோன்மணீயம் சுந்தரம்
பிள்ளையவர்கள் அக்கால இயற்கைப் படி
"தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நற்றிரு
நாடும்" என்று பாடியிருக்கிறார்கள். இப்பொழுது
நாம் அதைத் "தெக்கணமும் அதிற் சிறந்த தென்
மொழிநற்றிரு நாடும்" என்று திருத்திக்கொள்ள
வேண்டும். இல்லாவிட்டால் தமிழ் உணர்ச்சி
கெட்டுப்போகும்.
திரு. சுப்பையா பிள்ளையவர்கள் வணிக
நோக்கம் மட்டும் உடையவராயிருந்திருந்தால்,
மனோன்மணீயம் போன்றதொரு நூல் இல்லை
என்பதற்காக அதற்கு ஒரு பரிசுத் தொகை ஏற்படுத்தி
அத்தகைய நூல்கள்
|