பக்கம் எண் :

42மொழியாராய்ச்சிக் கட்டுரைகள்

     zend. bhaga; O.Pers. baga, a lord; Slav. bog, a lord; Lith.
Ma-bagas = a poor man, bagatas = rich; Goth. gabigs,
Skt.
Bhagavan = the gracious one, a god, God.

     பகு - பகவு = பிளவு, பிரிவு, துண்டு.

     பகு - பகல் = பகலவன், பகலோன்..

     பகல்-பால்=பிரிவு, பகுதி, பக்கம், குலம், புறம், பாதி, இடம், திசை.

     "பானாள்" (கலித். 90) பானாள் = அரைநாள்.

     "கூதிர்ப் பானாள்" (நெடுநல். 12) = நள்ளிரவு.

     பகல் = பாதி, நடு, உச்சிப்பொழுது, ஒளியுள்ள அரைநாள்.

     பகல் - பகர் - பகரம் = ஒளிவேளை, ஒளி, அழகு.

     பகர்தல் = ஒளிவிடுதல்.

     பகரம் - பகாரம் = அழகு. பகர்-பகரிப்பு = ஒளி, அழகு.

     பகல் - பகர் - பகரு = பிளவு, பிரிவு, பகை.

     பகு - பகிர் - பகர். பகர்தல் = பொருள்களைப் பகர்தல், பகிர்ந்து
     விற்றல், விலை கூறி விற்றல், விலை கூறுதல், கூறுதல். இனி,
     விடையங்களைப் பகுத்துக்கூறுதல் பகர்தல் எனினுமாம்.

     பகு - பகை - பகைவன். பகு - பகம் = வகுத்த வழி.

     ஆறு (வழி) மதநெறி, மதநெறியின் தொகை (6). ஆறு என்னும் சொல்,
வழியையும் '6' என்னும் எண்ணையும் குறித்தல் காண்க.

     பகு - பாகு = பகுதி, பக்கம், இருபக்கத்திலுமுள்ள கை, பக்கத்தி
லிருந்து பேணும் பாகன்.

     "பாகு கழிந்து யாங்கணும் பறைபட வரூஉம்"(சிலப். 15:46)

     பாகுபடுதல் = பிரிதல். பாகிடுதல் = பிரித்தல்.

     பாகு-பாகம்-baha(வ.) = இருபாகத்திலு முள்ள கையை நீட்டிய
     அளவு.

     பாகு - bhau(வ.) = கை.

     பாகு - வாகு. வாகு வளையம்-bahu valaya(வ.) = தோள்கடகம்.

     பாகு - பாகி. பாகித்தல் = பங்கிடுதல்.

     பாகு - பாகம்-bhaga(வ.) = பகுதி, பங்கு.

     பாகு - பாகை = பிரிவு, வரை.

     பக்கு - பங்கு = பாகம். பங்கு - பங்கம்-bhanga(வ.) = பகுதி, பிரிவு,

     பங்கு, துண்டு, சிறுதுகில், குறைவு, விகாரம், குற்றம், மானக்குறைவு,
     வெட்கம், தோல்வி, கேடு, இடர்.