பக்கம் எண் :

76மொழியாராய்ச்சிக் கட்டுரைகள்


9. மொழியாராய்ச்சியும்
மொழியகழ்வாராய்ச்சியும்

     ஒன்றேமொழி யென்பது, ஒரு மக்களினம் பேசும் பேச்சிலும் இயற்றும்
இலக்கியத்திலும் ஆளும் சொற்களின் முழுமையான சொற்றொகுதி.
சொற்களன்றி, மொழியென்று தனி வேறாக ஒன்றுமில்லை. ஆதலால்,
சொல்லாராய்ச்சியே மொழியாராய்ச்சிக்கு அடிப்படை. சொல்லாராய்ச்சி ஒரு
அல்லது பல சொற்களின் வரலாறுபற்றி யிருக்கலாம். அங்ஙனமே, மொழி
யாராய்ச்சியும் ஒரு அல்லது பல மொழிகளின் வரலாறுபற்றி யிருக்கலாம்.
மொழியென்பது, சொல்லையும் ஒரு மக்களினத்தின் சொற்றொகுதியையும்
குறித்தலால், மொழியாராய்ச்சி என்பது சொல்லாராய்ச்சியைக் குறித்தற்கும்
இடமுண்டு.

     மொழிகளுள், இந்தியும் மலையாளமும் போன்று புதியவும் உள;
கிரேக்கமும் இலத்தீனமும் போன்று முதியவும் உள. தமிழோ, முதிய
வற்றுள்ளும் முதிய முதன்மொழி. புதுமொழிகளும் முதுமொழிகளின்
திரிபாகவே தோன்றியிருத்தலால், சொல்லாராய்ச்சியைப் பொறுத்தமட்டில்,
இருவகை மொழியும் ஒன்றே.

     ஆய்தல் என்பது, ஒரு பொருளை நுணுகி நோக்கி அதன் உண்மைத்
தன்மையை உணர்தல்.

     "ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்
     ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம்.'"(தொல். உரி. 32)

     ஆர்தல் நிரம்புதல். ஆர ஆய்தல் ஆராய்தல்
     அகழ்தல் என்பது தோண்டுதல். மேன்மட்டத்தில் தோன்றாது புதைந்து
அல்லது மறைந்து கிடப்பதைக் கல்லியெடுத்தல் தோண்டுதல். அதுபோன்று
ஆழ்ந்து ஆராய்தலும் தோண்டுதல்.

     ஒ. நோ: தோண்டு-தேண்டு-தேடு-தேட்டம்.

             நோண்டு-நோடு-நோட்டம், நோடு-நாடு-நாட்டம்.

             நோண்டு-நேண்டு-நேடு-நேட்டம்.

     பொதுவாக, சொற்களின் வேர்ப் பொருளைத் தெளிவாகக் காட்டக்
கூடிய மொழி தமிழ் ஒன்றே. அதனால்,